நிச்சிரே
நிச்சிரே நிறுவனம் (ஆங்கிலம் Nichirei Corporation, சப்பானியம் ニチレイ株式会社) என்பது, டோக்கியோவை தலைமையிடமாககொண்டு, சப்பானில், செயல்படும் முன்னணி உறைபனி உணவுகள் தயாரிக்கும், குளிர் சேமிப்பு கிடங்கு நிறுவனம் ஆகும். உலகம் முழுவதும் இதன் சுமார் 80 துணை நிறுவனங்களுடன் இணைந்து கூட்டுறவு மூலம் செயல்பட்டுவருகிறது. இதன் தொழில்களானது பதப்படுத்தப்பட்ட உணவு, தளவாடங்கள், கடல் உணவுப் பொருள்கள் (முக்கியமாக மீன் சினை, இறால், எண்காலி,) இறைச்சி மற்றும் கோழிப் பண்ணை, மனை வணிகம் ஆகிய தொழில்கள் ஆகும். உயிர் அறிவியலில் இந்நிறுவனமானது நோய் எதிர்ப்பு ஆற்றல் வளர்ச்சி மற்றும் உற்பத்தி, நோயெதிர்ப்பியல் பொருட்கள், மற்றும் இயற்கைப் பொருட்களின் செயலாக்கத்தை உருவாக்குவது போன்றவை ஆகும்.
வகை | பொதுப் பங்கு |
---|---|
நிறுவுகை | 1942, திசம்பர் 24 as Teikoku Marine Products Control Company |
தலைமையகம் | Chūō, Tokyo, சப்பான் |
முதன்மை நபர்கள் | Mitsudo Urano (Chairman) Toshiaki Murai (President) |
தொழில்துறை | பதப்படுத்தப்பட்ட உணவுகள் முதன்மைப் பொருட்கள்; கடல் உணவுப் பொருள்கள், இறைச்சி மற்றும் கோழிப் பண்ணை, மனை வணிகம் |
நிகர வருமானம் | $109.3 million (FY 2010) |
பணியாளர் | 12,680 (2013) |
இணையத்தளம் | nichirei.co.jp |
வரலாறு
தொகுநிச்சிரே நிறுவனம் 1942 திசம்பர் 24 அன்று மீன்பிடி மற்றும் பிற 18 நிறுவனங்களின் மூலதனப் பங்களிப்புடன் டெய்கோகு கடல்சார் தயாரிப்புகள் நிறுவனம் நிறுவப்பட்டது. 1942 மே ஆம் ஆண்டு கடற்படை கட்டுப்பாட்டு கட்டளைக்கு இணங்க கடல் உணவு பொருட்கள், குளிர்சேமிப்புப் பொருள்கள், உறைபணி உணவுகள் போன்ற கடல் உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட வணிகங்களை கட்டுப்படுத்தும் மத்திய நிறுவனமாக மாறியது. 1945 திசம்பர் 1 அன்று கட்டுப்பாட்டு விதிகளை அகற்றப்பட்டு, (நவம்பர் 30, 1945 ) இந்நிறுவனம் வணிக ரீதியான குறி ஈட்டால் நிர்வகிக்கப்பட்ட தனியார் நிறுவனமாக மறு ஒழுங்கமைக்கப்பட்டு 'நிப்பான் ரெய்சோ கோ. லிமிட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1949 ல் டோக்கியோ பங்குச் சந்தையில் புதிய நிறுவனங்களின் பெயராக பட்டியலிடப்பட்டது.[1][2] .1985 ஆம் ஆண்டில் நிப்போன் ரெய்சோன் நிச்சரி நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Information on Hoovers". பார்க்கப்பட்ட நாள் 2010-10-27.
- ↑ "Information on answers.com". பார்க்கப்பட்ட நாள் 2010-10-27.
- ↑ M.L.Cohen. "referenceforbusiness.com page on Nichirei". பார்க்கப்பட்ட நாள் 2010-10-27.