நிடுகல் சோழர்
கர்நாடகத்திச் சில பகுதிகளை ஆண்ட மன்னர்கள்
நிடுகல் சோழர்கள் (Nidugal Cholas) என்பவர்கள் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடகத்தின் சில பகுதிகளை ஆண்ட அரச மரபினராவர்.
இவர்களின் கோட்டையாக நிடுகலின் மலை கோட்டை இருந்தது. இந்த மரபில் மிகவும் பிரபலமானவராக இருங்ல தேவ சோழ மகாராஜா (இருங்கோலா II) இருந்தார். இவர் ஹெஞ்செருவில் தனது தலைநகரைக் கொண்டிருந்தார். இவர்கள் போசளர்கள் மீது பகைமைப் போக்கைக் கொண்டிருந்தனர், அவர்களை எதிர்த்துவந்தனர். ஆனால் விஷ்ணுவர்தனனின் ஆட்சிக் காலத்தில் சிறிதுகாலம் அடங்கி இருந்தனர். சோழர் மற்றும் போசள பேர்ரசுகள் வீழ்ச்சியுற்றவுடன் இவர்கள் மீண்டும் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றனர். இவர்கள் உறையூர் பிரபு (ஆரம்பகால சோழர் தலைநகரம்) போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தனர். மேலும் தாங்கள் சோழ மன்னர் கரிகலனின் வம்சாவளியினர் என்று கூறிக்கொண்டனர். [1]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ B. L. Rice. Gazetteer of Mysore. Asian Educational Services, 2001 - Karnataka (India) - 1443 pages. p. 163.