இருக்குவேள் அரசர்கள்
இருக்குவேள் அரசர்கள் அல்லது இருக்குவேளிர் (பொ.பி. 435 - 765) என்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்த குறுநில அரச வம்சத்துள் ஒரு வம்சத்தவராவர். இவர் களப்பிரர் காலத்தில் அவர்களின் கீழும், பல்லவர் காலத்தில் அவர்களின் கீழும், சோழர் காலத்தில் அவர்களுக்கு கீழுமிருந்து அரசாண்டவர்கள். இவர்கள் கொடும்பாளூர் என்னும் நகரை தலைநகராகக் கொண்டு அரசாண்டனர். இக்கொடும்பாளூர் சங்ககாலத்தில் மிழலைக் கூற்றம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கள்ளர் மரபினை சேர்ந்தவர்களாக, க. அ. நீலகண்ட சாத்திரி அவரகள் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகிறார்.[1] இருக்குவேளிர் யதுவம்சகேது எனப் பட்டம் புனைந்தவர்களாயினும் அவர்கள் கள்ளர் மரபிற்குரியவர்கள் என்பதைத் திருப்பழனக் கல்வெட்டு மூலம் திரு. வே. மகாதேவன் எடுத்துக் காட்டியுள்ளார். “இருங்கோவேள்' என்ற பட்டம் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் வாழும் கள்ளர் இனமக்களின் ஒரு பிரிவினரின் பட்டப் பெயராக இன்றளவும் உள்ளது.[2]
ஆய்வுகள்
தொகுஇம்மன்னர்களை பற்றிய நிறைய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
- பொ.பி. 1907ல் தமிழ்நாடு பழம்பொருள் துறையினர்களால் இந்த இருக்குவேள் அரசர்கள் பற்றிய மூவர் கோவில் சாசனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.[3]
- அதை ஆராய்ந்து நீலகண்ட சாஸ்திரி ஒரு ஆய்வுக்கட்டுரையும்[4] தன் நூலான சோழர் வரலாறு என்னும் நூலிலும் பதிந்துள்ளார்.[5] அதன் படி நீலகண்டர் இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதினர்.
- ஆனால் இதை மீளாய்வு செய்து கெராசு என்பவர் இது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கூற அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்டது.[6]
- இந்த இருங்கோவேள் அரசர்கள் சங்க காலம் என்ற காலப்பகுதியில் வாழ்ந்த இருங்கோவேள் அரசர்களே என்று ஆரோக்கியசாமி[7] என்ற ஆய்வாளர் கருதினாலும் இரு வம்சத்தவருக்கும் எந்த தொடர்புமில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி என்பவர் மறுத்துமுள்ளார்.[8]
இருக்குவேள் அரசர்களின் பட்டியல்
தொகுமேற்குறிப்பிட்ட மூவர் கோவில் சாசனம் படி 11 இருக்குவேள் அரச்ர்களின் பட்டியல் ஆரோக்கியசாமி என்பவரால் வெளியிடப்பட்டது. அவை,
இருக்குவேள் பெயர் | துவராயமான ஆட்சிக்காலம் |
---|---|
இருக்குவேளன் | பொ.பி. 435-465 |
பரவீரசித்தன் | பொ.பி. 465-495 |
வீரதுங்கன் | பொ.பி. 495-525 |
அதிவீரன் | பொ.பி. 525-555 |
அநுபமன் | பொ.பி. 555-585 |
நிருபகேசரி | பொ.பி. 585-615 |
பரதுர்க்கமர்த்தனன் | பொ.பி. 615-645 |
சமராபிராமன் | பொ.பி. 645-675 |
பூதிவிக்கிரம கேசரி | பொ.பி. 675-705 |
பராந்தகன் | பொ.பி. 705-735 |
ஆதித்ய வர்மன் | பொ.பி. 735-765 |
இப்பட்டியலில் முதல் ஐந்து இருக்குவேளர்கள் களப்பிரர் மன்னர்களுக்கு ஆதரவாகவும், அடுத்து மும்மூன்று மன்னர்கள் முறையே பல்லவர் மற்றும் சோழர் மன்னர்களுக்கு ஆதரவாகவும் இருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ K. A. Nilakanta Sastri (1935). The Colas. G .S .Press. p. 136.
- ↑ வே. மகாதேவன் (2009). கொடும்பாளூர் வேளிர் வரலாறு. pp. 90, 150.
- ↑ Annual Report Epigraphy, Madras, 1907-1908
- ↑ Journal of Oriental Research Madras, 1933, pp 1-10
- ↑ K.A. Neelakanta Sastri, The Colas, Vol.i. 1935
- ↑ Rev. H. Heras, Journal of the Royal Asiatic Society
- ↑ M. Arokiaswamy, The Early History of the Vellar Basin, 1954, p.61
- ↑ களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.