அநுபமன் (பொ.பி. 555-585) என்பவன் கொடும்பாளூர் நகரை களப்பிரர் காலத்தில் அரசாண்ட இருக்குவேள் அரசர்கள் வம்சத்துள் ஒருவன். இந்த இருக்குவேள் அரசர்கள் பற்றிய மூவர் கோவில் சாசனம் ஒன்று கிடைத்துள்ளது.[1] இவனாண்ட களப்பிரர்களின் இறுதிக்காலத்தில் காலத்தில் அவர்களுக்கு எதிராக பல்லவர் வம்சத்தவர்கள் சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னனின் கீழ் போர் தொடுத்து களப்பிரர்களை வீழ்த்தினர். அதற்குப்பிறகு இவன் பல்லவர்களுக்கு அடங்கி அரசாண்டாமன்[2] இவனுக்கு சங்ககிருதன் என்னும் சிறப்புப் பெயரிருந்ததைக் கொண்டு இவன் சமணர்களின் சங்கத்தை ஆதரித்தவன் என்று தெரிகிறது. மலையத்துவசன் என்ற சமண முனிவர் ஒருவர் தேனிமலையில் ஒரு இருக்குவேள் அரசனிடம் நிலம் தானம் பெற்றான். அந்த தானமளித்த இருக்குவேளன் அநுபமன் என்று கருதப்படுகிறான்.

மேற்கோள்கள்

தொகு
  1. Annual Report Epigraphy, Madras, 1907-1908
  2. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அநுபமன்&oldid=4062324" இலிருந்து மீள்விக்கப்பட்டது