நிதா கான்

இந்திய பெண் உரிமை செயற்பாட்டாளர்

நிதா கான் (Nida Khan) இசுலாமிய சட்டமான உடனடி முத்தலாக்கை அனுபவித்த ஓர் இந்தியப் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார்.[1][2][3][4] முத்தலாக் நடைமுறைகளுக்கு எதிராகப் பேசியதற்காக நிதாவை சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்று இசுலாமிய தர்மசாத்திரியான குர்சித்து ஆலம் ரசுவியால் ஒரு சட்டப் பரிந்துரை வெளியிடப்பட்டது.[5][6] அலா அசுரத்து உதவும் சங்கம் என்ற ஓர் அரசு சாரா நிறுவனத்தை நிதா கான் நிறுவினார்.[7]

நிதா கான்
Nida Khan
பிறப்பு30 ஏப்ரல் 1994
பரேலி, உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியா
கல்விமுதுநிலை வணிகவியல் & சட்டம்
அறியப்படுவதுசமுக செயல்பாட்டாளர்
பட்டம்இந்திய மலாலா
வாழ்க்கைத்
துணை
சீரன் ரசா கான் (2015-2016)

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சர்ச்சைகள்

தொகு

நிதா கான் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர் வரதட்சணை கேட்டு வற்புறுத்தப்பட்டார். கணவர் தன்னை தாக்கியதால் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக அவர் கூறினார். இதனால் கணவர் அவருக்கு உடனடி முத்தலாக் கொடுத்தார். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு சூலை மாதம் 17 ஆம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்

தனது புதிய இலாப நோக்கற்ற குழுவான அலா அசுரத்து உதவும் சங்கம் மூலம், நிதா கான் இப்போது மற்ற இசுலாமியப் பெண்களுக்கு முத்தலாக், பலதார மணம், குடும்ப வன்முறை மற்றும் இசுலாத்தில் தடைசெய்யப்பட்ட நிக்காகு அலாலா போன்ற தீங்கான மரபுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அறிவுரை வழங்குகிறார். நிக்காகு அலாலா என்பது விவாகரத்து பெற்ற பெண் மற்றொரு ஆணை திருமணம் செய்துகொள்வது, திருமணத்தை முடித்துக் கொள்வது, பின்னர் விவாகரத்து செய்வது - இவை அனைத்தும் ஒரு பெண்ணின் முன்னாள் கணவனை மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கும்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Social activist Nida Khan to get more security: UP Police". தி எகனாமிக் டைம்ஸ். 20 July 2018. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/social-activist-nida-khan-to-get-more-security-up-police/articleshow/65069047.cms. பார்த்த நாள்: 21 July 2018. 
  2. "Justice for Nida Khan, triple talaq given to her declared invalid, husband to be tried for domestic violence". Zee News. 18 July 2018. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
  3. "Fatwa issued against woman who defied Muslim clerics over 'triple talaq' instant divorce". Adam Withnall. The Independent. 17 July 2018. Archived from the original on 20 June 2022. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
  4. "PM Modi to meet Triple talaq victim Nida Khan during Shahjahanpur rally". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-07-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  5. "Social boycott fatwa issued against anti-triple talaq activist Nida Khan". ABP Live. 17 July 2018. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
  6. Kumar, Anurag (2018-07-17). "'No one can ostracise me from Islam,' says Nida Khan after fatwa issued against her by Imam of Bareilly Jama Masjid". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
  7. "Ala Hazrat Helping Society Muslim women took out rally in Bareilly population control law should be made like triple talaq". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
  8. Singh, Prabhat (26 September 2018). "Interview With Indian 'Instant Divorce' Victim Nida Khan". The Diplomat – Asia-Pacific Current Affairs Magazine. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதா_கான்&oldid=3940296" இலிருந்து மீள்விக்கப்பட்டது