புறக்கணிப்பு
புறக்கணிப்பு, ஒன்றியொதுக்கல், அல்லது பகிஷ்கரிப்பு (boycott) என்பது வன்முறையற்ற, தன்னார்வ மற்றும் வேண்டுமென்றே ஒரு நபர், அமைப்பு அல்லது நாட்டை எதிர்ப்பின் வெளிப்பாடாக, பொதுவாக அறம், சமூக, அரசியல் அல்லது சுற்றுச்சூழல் காரணங்களுக்காகப் பயன்படுத்துதல், கொள்வனவு அல்லது கையாள்வதில் இருந்து விலகும் செயலைக் குறிக்கும். புறக்கணிப்பின் நோக்கம் அதன் இலக்குக்கு சில பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது அல்லது அறச் சீற்றத்தைக் குறிப்பது, ஆட்சேபனைக்குரிய நடத்தையை மாற்ற இலக்கை கட்டாயப்படுத்த முயற்சிப்பது போன்றவை ஆகும். புறக்கணிப்பு ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். இந்தியர்கள் குடியேற்றக்கால பிரித்தானியாவின் பொருட்களைப் புறக்கணித்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
சில நேரங்களில், புறக்கணிப்பு என்பது நுகர்வோர் செயல்பாட்டின் ஒரு வடிவமாக இருக்கலாம். இதேபோன்ற நடைமுறையை ஒரு தேசிய அரசாங்கம் சட்டமாக்கும்போது, அது பொருளாதாரத் தடை என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், அடிக்கடி, ஒரு வணிகத்தை புறக்கணிக்கும் அச்சுறுத்தல் ஒரு வெற்று அச்சுறுத்தலாகக் கணிக்கப்படுகிறது. இது விற்பனையில் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.[1]
1880 ஆம் ஆண்டில் அயர்லாந்து தேசியவாதத் தலைவர் சார்லசு இசுடுவர்ட் பார்னெல் என்பவரின் ஆலோசனையின் பின்னர், அயர்லாந்தில் வசிக்காத நில உரிமையாளர் ஒருவரின் உள்ளூர் முகவரான கேப்டன் சார்லசு பாய்காட் என்பவருக்கு எதிராக இந்த உத்தி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. அவரின் நினைவாக ஆங்கிலந்த்தில் இவ்வகை எதிர்ப்புப் போராட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.[2][3]
குறிப்பிடத்தக்க புறக்கணிப்புகள்
தொகு- மகாத்மா காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானியப் பொருட்கள் மீதான இந்தியர்களின் புறக்கணிப்பு
- அமெரிக்கப் புரட்சி, பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் போன்ற பிரித்தானியப் பொருட்கள் மீதான அமெரிக்கப் புறக்கணிப்புகள்
- 1920களில் அமெரிக்காவில் என்றி போர்டிற்கு எதிரான யூதர்களின் புறக்கணிப்பு.
- இலங்கையில் அரசாங்க சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசின் அழைப்பின் பேரில் இலங்கைத் தமிழர் போட்டியிடாது புறக்கணித்தனர்.
- விடுதலைப் புலிகளின் அழைப்பின் பேரில் 2005 இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் இலங்கைத் தமிழர் வாக்களிக்காது புறக்கணித்தனர்.
- இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ Chang, Andrea (2021-05-09). "Patagonia shows corporate activism is simpler than it looks". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Marlow, Joyce (1973). Captain Boycott and the Irish. André Deutsch. pp. 157–173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-233-96430-0.
- ↑ Marlow, Joyce (1973). Captain Boycott and the Irish. André Deutsch. pp. 133–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-233-96430-0.