நித்யா கிருஷிந்தா மகேசுவரி

இந்தோனேசியவைச் சேர்ந்த முன்னாள் இறகுப்பந்தாட்ட வீராங்கனை

நித்யா கிரிஷிந்தா மகேசுவரி கோர்வா (Nitya Krishinda Maheswari Korwa) (பிறப்பு: திசம்பர் 16, 1988) இந்தோனேசியவைச் சேர்ந்த முன்னாள் இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜெய ராயா ஜகார்த்தாவுடன் இணைந்து விளையாடிய. இரட்டையர் போட்டியில் நிபுணத்துவம் பெற்றவர். 2011 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பெண்கள் இரட்டையர் தங்கப் பதக்கங்களை வென்றார்.

நித்யா கிருஷிந்தா மகேசுவரி
2013இல் நட்ந்த பிரஞ்ச் ஓபன் சூப்பர்சீரிஸ் போட்டியில் மகேசுவரி
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்நித்யா கிருஷிந்தா மகேசுவரி கோர்வா[1]
நாடுஇந்தோனேசியா
பிறப்பு16 திசம்பர் 1988 (1988-12-16) (அகவை 35)
பிலித்தார், கிழக்கு சாவகம், இந்தோனேசியா
உயரம்1.68 மீ
ஓய்வு பெற்றது2018
கரம்வலது
மகளிர் இரட்டையர் பிரிவு
பெரும தரவரிசையிடம்கிரேசியா பாலியுடன் இணைந்து 2 முறை (10 மார்ச் 2016)
இ. உ. கூ. சுயவிவரம்

மகேசுவரி 2009 உலக வாகையாளர் போட்டியில் பங்கேற்றார். அதில் இவர் கிரேசியா பாலியுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் 9வது இடத்தைப் பிடித்தார். 2011-இல், தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் அன்னேக் பெய்ன்யா அகஸ்டினுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றார். [2] 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாலியுடனான மகளிர் இரட்டையர் தங்கப் பதக்கத்தையும் வென்றார். [3]

2015 கொரியா ஓபனில் கிரேசியா பாலியுடன் இணைந்து தனது முதல் சூப்பர்சீரிஸ் பட்டத்தை வென்றார். [4]

2016-இல், இவரும் அவரது கூட்டாளியான கிரேசியா பாலியும் பிடபிள்யுஎப் சூப்பர்சீரிஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இருப்பினும், மகேசுவரிக்கு திட்டமிடப்பட்ட முழங்கால் அறுவை சிகிச்சையின் காரணமாக அவர்கள் போட்டியில் இருந்து விலகினர். மேலும் அவர்களின் இடத்திற்கு விவியன் ஹூ மற்றும் வூன் கே வெய் ஆகியோர் மாற்றப்பட்டனர். [5]

சொந்த வாழ்க்கை தொகு

மகேசுவரி ஒரு பப்புவான் தந்தைக்கும் ஒரு சாவகத் தாய்க்கும் பிறந்தார். இவரது தந்தை பானுஸ் கோர்வா ஒரு முன்னாள் தேசிய கால்பந்து வீரர் ஆவார். அவர் அரேமா மலங் கால்பந்து அணிக்காக விளையாடியுள்ளார். இவரது உறவினர் லிசா ரம்பேவாஸ் ஒரு பிரபலமான பலு தூக்கும் வீரரும் 2 முறை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவருமாவார். லிசாவின் தந்தையான இவரது மாமாவும் ஒரு பலு தூக்கும் வீரராவர். [6]

சான்றுகள் தொகு

  1. "Biodata Atlet: Nitya Krishinda Maheswari Korwa". jayaraya.org (in இந்தோனேஷியன்). PB Jaya Raya. Archived from the original on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  2. "(SEA Games) Anneke/Nitya Raih Emas Ganda Putri". Badminton Association of Indonesia இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190115014238/https://badmintonindonesia.org/app/information/newsDetail.aspx?%2F549. 
  3. "Lady shuttlers win gold at Games, after 36 years". The Jakarta Post. http://www.thejakartapost.com/news/2014/09/28/lady-shuttlers-win-gold-games-after-36-years.html. 
  4. "Greysia Polii & Nitya Krishinda Maheswari win first Superseries title at Korean Open". YONEX இம் மூலத்தில் இருந்து 3 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151003182803/http://www.yonex.com/sports/badminton/news/badminton/greysia-polii-and-nitya-krishinda-maheswari-win-first-superseries-title-at-korean-open/. 
  5. "At Least, Three Badminton Players Withdraw from Dubai SSF 2016". Badminton Noise இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170323052358/http://www.badmintonoise.com/least-three-badminton-players-withdraw-dubai-ssf-2016/534/. 
  6. Febriyanti, Imelda (2 October 2015). "Couple: Nitya Buka-bukaan Tentang Dirinya dan Greysia (II)". bola.com (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.

வெளி இணைப்புகள் தொகு