நிம்மி

இந்திய நடிகை (1933-2020)

நிம்மி ( Nimmi ) (பிறப்பு நவாப் பானு; 18 பிப்ரவரி 1932 - 25 மார்ச் 2020), 1950கள் மற்றும் 1960 களின் முற்பகுதியில் பாலிவுட் திரைப்படங்களில் பங்களித்த இந்திய நடிகை ஆவார். இந்தித் திரைப்படங்களின் "பொற்காலத்தின்" முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்.[1][2]

நிம்மி
பிறப்புநவாப் பானு
(1932-02-18)18 பெப்ரவரி 1932
ஆக்ரா, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா, (நவீன உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு25 மார்ச்சு 2020(2020-03-25) (அகவை 88)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1949–1965
குறிப்பிடத்தக்க படைப்புகள்பர்சாத் (1949)
தீதார் (1951)
தாக் (1952)
ஆன் (1952)
அமர் (1954)
'உரான் கடோலா' ( வானரதம் ) (1955)
குந்தன் (1955)
பசந்த் பகார் (1956)
வாழ்க்கைத்
துணை
எஸ். அலி ராசா
(தி. 1965; his death 2007)
விருதுகள்காலாகர் விருது (வாழும் நபர் விருது, 2015

உற்சாகமான கிராமப் பெண் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதேசமயம் கற்பனை மற்றும் சமூகக் கதைகளிலும் நடித்துள்ளார். சாசா (1951), இந்தியாவின் முதல் வண்ணப்படமான ஆன் (1952) ( டெக்னிக் வர்ணத்தில் வெளியான முதலாவது திரைப்படம் இதுவாகும். கேவா வர்ணத்தில் 16 மிமீ இல் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பின்னர் டெக்னிக் வண்ணத்திற்கு மாற்றப்பட்டது) உரான் கடோலா (1955) ( பின்னர் இது இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வானரதம் என வெளியனது), பாய்-பாய் (1956), குந்தன் (1955), மேரே மெஹபூப் (1963), பூஜா கே பூல் (1964), ஆகாஷ்தீப் (1965), மற்றும் பசந்த் பஹார் (1956).ஆகிய படங்களில் நடித்திருந்தார். ராஜ் கபூர் நவாப் பானு என்ற இவரது பெயரை "நிம்மி" என்று மாற்றினார்.[3][4]

ஆரம்பகால வாழ்க்கை.

தொகு

நவாப் பானு ஆக்ராவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார்.[5] இவரது தாயார் வாஹிதன் ஒரு பாடகியும் மற்றும் நடிகையும் ஆவார். நிம்மியின் தந்தை அப்துல் ஹக்கீம் ஒரு இராணுவ ஒப்பந்தக்காரராக பணியாற்றினார். இவர் பிறந்தவுடன் இவரது தாத்தா "நவாப்" என்றும் இவரது பாட்டி "பானு" என்றும் வைத்தனர். இவரது தாயார் இந்தியத் திரைப்பட இயக்குநர் மெகபூப் கான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நல்லுறவில் இருந்தார். அவர்கள் திரைப்படத் தயாரிப்பில் முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர்.

தொழில் வாழ்க்கை

தொகு

1930 களில் இவரது தாயார் வாஹிதனுடன் பணியாற்றிய மெஹபூப் கான் 1948 ஆம் ஆண்டில் நிம்மிக்கு தனது அப்போதைய தயாரிப்பான அந்தாஸ் படத்தின் படபிடிப்பை பார்க்க அழைத்தார். திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு இது திரைப்படத் தயாரிப்பு செயல்முறையைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. படப்பிடிப்பின் போது, நிம்மி படத்தில் ராஜ் கபூரை சந்தித்தார். அந்த நேரத்தில், ராஜ் கபூர் தனது தயாரிப்பான பர்சாத் (1949) படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஒரு இளம் பெண்ணைத் தேடிவந்தார். அந்தாஸ் படப்பிடிப்பில் நிம்மியை பார்த்த ராஜ்கபூர், நடிகர் பிரேம்நாத்துக்கு ஜோடியாக பர்சாத் படத்தில் பதின்ம வயது நிம்மியை நடிக்க வைத்தார். நகரத்தில் வாழும் மனிதாபிமானமற்ற மனிதரைக் காதலிக்கும் அப்பாவிப் பெண்ணாக நிம்மி நடித்தார். 1949 இல் வெளியான பர்சாத் திரைப்பட வரலாற்றில் இடம் பெற்றது. இது வணிக ரீதியான வெற்றியாக இருந்தது. நட்சத்திரங்களான நர்கிஸ், ராஜ் கபூர் மற்றும் பிரேம் நாத் ஆகியோர் இருந்தபோதிலும், நிம்மி மிகவும் முக்கியமான பாத்திரத்தைக் கொண்டிருந்தார். மேலும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இறப்பு

தொகு
 
தனது கடைசி ஆண்டுகளில் நிம்மி

நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிம்மி மார்ச் 2020 அன்று, அவர் தனது 87 வயதில் ஜுஹு மருத்துவமனையில் இறந்தார்.[3][6][7]

ஆதாரங்கள்

தொகு
  • Interview, Nimmi: "I have a dream to be Queen", இந்தியன் எக்சுபிரசு Newspaper, Issue date: Friday, 30 May 1997. Copyright © 1997 Indian Express Newspapers (Bombay) Ltd.
  • Reuben, Bunny. Mehboob: India's DeMille, South Asia Books
  • Raheja, Dinesh. The Hundred Luminaries of Hindi Cinema, India Book House Publishers.
  • Reuben, Bunny. Follywood Flashback, Indus publishers
  • Rajadhyaksha, Ashish and Willemen, Paul. The Encyclopedia of Indian Cinema, Fitzroy Dearborn Publishers.
  • Akbar, Khatija. Madhubala: Her Life, Her Films, New Delhi: UBS Publishers' Distributors
  • Lanba, Urmila. The Life and Films of Dilip Kumar, Orient Paperbacks, India; New e. edition
  • Ritu, Nanda. Raj Kapoor: His Life, His Films, Iskusstvo
  1. "Muslim female icons of Bollywood". The Nation இம் மூலத்தில் இருந்து 19 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221219234730/https://www.nation.com.pk/17-Jun-2016/muslim-female-icons-of-bollywood. 
  2. Namrata Joshi (26 March 2020). "Nimmi, doe-eyed star of the 1950s, passes away at 88". The Hindu (newspaper). https://www.thehindu.com/entertainment/movies/nimmi-doe-eyed-star-of-the-1950s-passes-away-at-88/article31170158.ece. 
  3. 3.0 3.1 "Veteran Bollywood actress Nimmi passes away at 88". The New Indian Express (newspaper). 27 March 2020. https://www.newindianexpress.com/entertainment/hindi/2020/mar/27/veteran-actor-nimmi-passes-away-at-88-2121982.html. 
  4. Dinesh Raheja. "Petite powerhouse Nimmi". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  5. Dinesh Raheja. "Petite powerhouse Nimmi". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  6. "Bollywood actor Nimmi no more". Deccan Herald (newspaper). 26 March 2020. https://www.deccanherald.com/entertainment/entertainment-news/bollywood-actor-nimmi-no-more-817861.html. 
  7. Yesteryear actress Nimmi passes away at 88 Filmfare.com website, Published 25 March 2020. Retrieved 10 January 2021

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நிம்மி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்மி&oldid=4172527" இலிருந்து மீள்விக்கப்பட்டது