நிம்மியம்பட்டு

நிம்மியம்பட்டு (Nimmiyambattu) என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டதும், வாணியம்பாடி நகரத்தில் இருந்து கிழக்கே 12கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

வரலாறு

தொகு

நிம்மியம்பட்டு ஊரின் பழைய பெயரானது நியமம்பற்று என்பதாகும். இந்த நியமம்பற்று என்ற பெயரே நாளடைவில் மருவி நிம்மியம்பட்டு என்றானது.[1]

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்த ஊரானது வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலங்காயத்தில் இருந்து 4 கி. மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 204 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1478 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6589 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3353, பெண்களின் எண்ணிக்கை 3236 என உள்ளது. கிரம மக்களின் கல்வியறிவு விகிதமானது is 62.9% என்று உள்ளது. [2]

இந்த ஊரில் பெத்தபுலியம்மன் என்ற பழம்பெருமை வாய்ந்த கோயில் உள்ளது. இங்கு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கோயில்திருவிழா மிகச் சிறப்பு வாயந்த திருவிழா ஆகும். இந்த ஊரில் செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. தமிழ் நாட்டின் சிறப்பு வாய்ந்த ஆட்டுச்சந்தைகளுள் இதுவும் ஒன்றாகும். பொங்கலையொட்டி நடைபெறும் எருது விடும் திருவிழா, பன்னெடுங்காலந்தொட்டு நடைபெற்று வரும் பாரம்பரியம்மிக்க திருவிழா ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர் ப. வெங்கடேசன் (2017). பொங்கல் மலர். சென்னை: சிந்தனையாளன் இதழ். pp. 195–196.
  2. http://www.onefivenine.com/india/villages/Vellore/Alangayan/Nimmiyambattu
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்மியம்பட்டு&oldid=2955068" இலிருந்து மீள்விக்கப்பட்டது