நியாய விலைக் கடை

நியாய விலைக் கடை (Public distribution system) என்பது பொது விநியோக முறையின் கீழ் இந்திய அரசாலும், மாநில அரசாலும் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையமாகும். இதுவரை 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் உள்ளன.[1]

கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அரசின் மானியத்தின் மூலமாக குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் இதனை பயன்படுத்த குடும்ப அட்டை அவசியமாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "பொது விநியோக முறை". நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா). Archived from the original on 2010-12-17. பார்க்கப்பட்ட நாள் 2012-03-24.
  2. "தமிழ் நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாய_விலைக்_கடை&oldid=3587348" இலிருந்து மீள்விக்கப்பட்டது