நியோடிமியம்(III) ஆக்சைடு
நியோடிமியம்(III) ஆக்சைடு (Neodymium(III) oxide) என்பது Nd2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியம் செசுகியுவாக்சைடுஎன்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நியோடிமியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகிறது. வெளிர் சாம்பல்-நீல அறுகோண படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது[1]. முன்னதாக ஒரு தனிமம் எனக்கருதப்பட்ட அரிய-மண் கலவையான டிடிமியத்தில் ஒரு பகுதியாக நியோடிமியம்(III) ஆக்சைடு காணப்படுகிறது[2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நியோடிமியம்(III) ஆக்சைடு
| |
வேறு பெயர்கள்
நியோடிமியம் ஆக்சைடு, நியோடிமியம் செசுகியுவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
1313-97-9 | |
பண்புகள் | |
Nd2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 336.48 கி/மோல் |
தோற்றம் | வெளிர் நீல சாம்பல் அறுகோண படிகங்கள் |
அடர்த்தி | 7.24 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,233 °C (4,051 °F; 2,506 K) |
கொதிநிலை | 3,760 °C (6,800 °F; 4,030 K)[1] |
.0003 g/100 mL (75 °C) | |
+10,200.0•10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம், hP5 |
புறவெளித் தொகுதி | P-3m1, No. 164 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1807.9 கி.யூ•மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
158.6 யூல்•மோல்−1•K−1 |
வெப்பக் கொண்மை, C | 111.3 J•mol−1•K−1[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம்(II) குளோரைடு நியோடிமியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | யுரேனியம்(VI) ஆக்சைடு பிராசியோடிமியம்(III) ஆக்சைடு புரோமித்தியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுசூரிய ஒளிக்காப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட கண்ணாடிகளில் கலக்க மாசாக நியோடிமியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது. மேலும் திண்மநிலை சீரொளிகள் உருவாக்கவும், வண்ணக்கண்ணாடிகள் தயாரிக்கவும், மிளிர்பூச்சுகள் தயாரிப்பிலும் இதைப்பயன்படுத்துகிறார்கள்[3]. நியோடிமியம் கலக்கப்பட்ட கண்ணாடி மஞ்சள் மற்றும் பச்சை ஒளியை ஈர்த்துக் கொள்வதால் செவ்வூதா நிறத்திற்கு மாறுகிறது. இதனால் பற்றவைப்புக் கண்ணாடிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது[4]. நியோடிமியக் கலப்பு கண்ணாடிகளில் சில இருநிறங்காட்டிகளாக விளங்குகின்றன. அதாவது ஒளி அமைப்பைப் பொறுத்து இக்கண்ணாடி நிறத்தை மாற்றிக் கொள்கிறது. அலெக்சாண்டரைட்டு என்று பெயரிடப்பட்ட கனிமம் சுரிய ஒளியில் நீலமாகவும் செயற்கை ஒளியில் சிவப்பாகவும் தோன்றுகிறது[5]. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 7000 டன்கள் நியோடிமியம்(III) ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. பலபடியாக்கல் வினையூக்கியாகவும் நியோடிமியம்(III) ஆக்சைடைப் பயன்படுத்துகிறார்கள்[4].
வினைகள்
தொகுநியோடிமியம்(III) ஆக்சைடை நியோடிமியம்(III) நைட்ரைடு அல்லது நியோடிமியம்(III) ஐதராக்சைடு சேர்மத்தை காற்றில் எரித்துத் தயாரிக்கிறார்கள்[6].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 471, 552, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Brady, George Stuart; Clauser, Henry R.; Vaccari, John A. (2002), Materials Handbook (15 ed.), New York: McGraw-Hill Professional, p. 779, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-136076-0, பார்க்கப்பட்ட நாள் 2009-03-18
- ↑ Eagleson, Mary (1994), Concise Encyclopedia of Chemistry, Springer, p. 680, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-011451-5, பார்க்கப்பட்ட நாள் 2009-03-18
- ↑ 4.0 4.1 Emsley, John (2003), Nature's Building Blocks, Oxford University Press, pp. 268–9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-850340-8, பார்க்கப்பட்ட நாள் 2009-03-18
- ↑ Bray, Charles (2001), Dictionary of Glass (2 ed.), University of Pennsylvania Press, p. 103, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-3619-4, பார்க்கப்பட்ட நாள் 2009-03-18
- ↑ Spencer, James Frederick (1919), The Metals of the Rare Earths, London: Longmans, Green, and Co, p. 115, பார்க்கப்பட்ட நாள் 2009-03-18