நியோட்டேம்

நியோட்டேம் என்பது நியூட்ராசுவீட் என்னும் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு செயற்கை இனிப்பூட்டி. இது மேசைச் சர்க்கரை எனப்படும் சுக்கிரோசை விட 7,000 முதல் 13,000 மடங்கு இனிப்பானது.[1] ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இது E961 என்னும் "E" எண்ணினால் குறிக்கப்படுகிறது.[2] இது மிதமான வெப்பநிலைப்புக் கொண்டது. விரைவில் வளர்சிதைமாற்றம் அடையக்கூடியது. அத்துடன் இது விரைவிலேயே நீக்கப்படுவதால், உடலில் தங்கிச் சேகரிக்கப்படுவது இல்லை.[3]

நியோட்டேம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(3S)-3-(3,3-Dimethylbutylamino)-4-[[(2S)-1-methoxy-1-oxo-3-phenylpropan-2-yl]amino]-4-oxobutanoic acid
வேறு பெயர்கள்
E961; N-(N-(3,3-Dimethylbutyl)-L-α-aspartyl)-L-phenylalanine 1-methyl ester
இனங்காட்டிகள்
165450-17-9 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9810996
  • CC(C)(C)CCN[C@@H](CC(=O)O)C(=O)N[C@@H](CC1=CC=CC=C1)C(=O)OC
UNII VJ597D52EX Y
பண்புகள்
C20H30N2O5
வாய்ப்பாட்டு எடை 378.47 g·mol−1
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

நியோட்டேமின் முக்கியமான வளர்சிதைமாற்றத் தடவழி, உடல் முழுவதிலும் காணப்படும் எசுத்தரேசுகளால் எற்படும் மீதைல் எசுத்தரின் நீர்ப்பகுப்பு ஆகும். இதனால், எசுத்தரிழந்த நியோட்டேமும், மெதனாலும் கிடைக்கின்றன. உணவுப் பொருட்களை இனிப்பாக்குவதற்கு மிகவும் குறைந்த அளவான நியோட்டேமே தேவைப்படுவதால் அதிலிருந்து உருவாகும் மெதனால் பொதுவான உணவுப் பொருட்களில் காணப்படுவதை விட மிகவும் குறைவானதே.

குறிப்புகள்

தொகு
  1. Mayhew, DA (2012). "9. Neotame". In Lyn O'Brien Nabors (ed.). Alternative Sweeteners. CRC Press. pp. 133–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4614-8. பார்க்கப்பட்ட நாள் 29 January 2013. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. "New additives approved for use". Food Standards Agency UK. 2010-11-26. Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-23.
  3. Abbott, P. J. (2004). "Neotame". JECFA. International Programme on Chemical Safety. பார்க்கப்பட்ட நாள் 2007-08-31.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோட்டேம்&oldid=3560741" இலிருந்து மீள்விக்கப்பட்டது