நிரஞ்சன் பிரசாத் சக்கரவர்த்தி

நிரஞ்சன் பிரசாத் சக்கரவர்த்தி (Niranjan Prasad Chakravarti) (1 சூலை 1893 – 19 அக்டோபர்1956) கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அறிஞரான இவர், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1948 முதல் 1950 வரை பணியாற்றியவர்.

நிரஞ்சன் பிரசாத் சக்கரவர்த்தி
பிறப்பு(1893-07-01)சூலை 1, 1893
கிருஷ்ணாநகர், நதியா மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புஅக்டோபர் 19, 1956(1956-10-19) (அகவை 63)
புதுதில்லி, இந்தியா
பணிகல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அறிஞர்

பணிகள்

தொகு

1929ல் தமிழ்நாட்டின், உதகமண்டலத்தில் கல்வெட்டியல் துறையில் உதவி கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். 1934ல் இந்திய அரசில் தலைமை கல்வெட்டியலாளராக பணி உயர்த்தப்பட்டார்.

1940ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் துணைத் தலைமை இயக்குநராக பணியேற்றார். 1945ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணை தலைமை இயக்குநராக பணியேற்றார். பின்னர் மோர்டிமேர் வீலருக்குப் பின் 1948ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்று, 1950ல் பணி ஓய்வு பெற்றார்.[1]

பணி ஓய்வுக்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் துறையின் ஆலோசகராக 1952 முடிய பணியாற்றினார்

எழுதிய நூல்கள்

தொகு
  • India and Central Asia[2]
  • India and Java[3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://books.google.co.in/books?id=lLQuDwAAQBAJ&pg=PA170&lpg=PA170&dq=Niranjan+Prasad+Chakravarti%27%27%27&source=bl&ots=zSZiS91-tY&sig=xvTCyAPIerOxOvdUXWtmIsdC2IM&hl=ta&sa=X&ved=2ahUKEwiI3MfD37rfAhVWU30KHef1D3QQ6AEwDXoECAEQAQ#v=onepage&q=Niranjan%20Prasad%20Chakravarti&f=false
  2. India and Central Asia / by Dr. Niranjan Prasad Chakrvarti
  3. India and Java
முன்னர் தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1948 - 1950
பின்னர்