மோர்டிமர் வீலர்

சர் ராபர்ட் எரிக் மோர்டிமர் வீலர் (Sir Robert Eric Mortimer Wheeler) (பிறப்பு:10 செப்டம்பர் 1890 – 22 சூலை 1976) ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ அதிகாரியாகவும், தொல்லியல் அறிஞரும் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் எட்டாவது தலைமை இயக்குநராகவும், வேல்ஸ் மற்றும் இலண்டன் அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தொல்லியல் நிறுவனத்தையும் நிறுவியர் ஆவார். இவர் தொல்லியல் தொடர்பாக 24 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

சர் மோர்டிமர் வீலர்
பிறப்புராபர்ட் எரிக் மோர்டிமர் வீலர்
10 செப்டம்பர் 1890
கிளாஸ்கோ, ஸ்டாக்லாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு22 சூலை 1976(1976-07-22) (அகவை 85)
லெதர்ஹெட், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைதொல்லியல்
கல்வி கற்ற இடங்கள்இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
துணைவர்தெஸ்சா வீலர் (1914-1936) (இறப்பு), மவிஸ் டி வேரா கோல் (1939-1942) (மண முறிவு), மார்கரெட் கூலிஙரிட்ஜ் வீலர் (1945)
பிள்ளைகள்மைக்கேல் மோர்டிமர் வீலர்
இராணுவப் பணி
சார்பு ஐக்கிய இராச்சியம்
சேவை/கிளை பிரித்தானிய இராணுவம்
சேவைக்காலம்1914–1921
1939–1948
தரம்பிரிகேடியர், ஐக்கிய இராச்சியம்
படைப்பிரிவுபீரங்கிப் படை
கட்டளை42nd Mobile Light Anti-Aircraft Regiment
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
விருதுகள்Military Cross
Territorial Decoration

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1944–48 தொகு

 
அரிக்கமேடு தொல்லியல் களத்தில் தமிழகம்-உரோமாணிய கடல் வணிகம் குறித்தான் பீங்கான் பாண்டம் போன்ற தொல் பொருட்களை மோர்டிமர் வீலர் கண்டுபிடித்தார்

மோர்டிமர் வீலர் 1944-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநர் பதவியில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார். இவர் புது தில்லியில் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவினார்.

அக்டோபர் 1944-இல் இவர் தட்சசீலத்தில் பி. பா. லாலுடன் இணைந்து ஆறு மாதம் அகழாய்வுப் பணியை துவக்கினார். சிந்துவெளி நாகரிகப் பகுதிகளான மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா பகுதிகளில் விரிவான அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் தென்னிந்தியாவில் அரிக்கமேடு தொல்லியல் களத்தில் அகழாய்வுப் பணி மேற்கொண்டதன் மூலம் ரோமப் பேரரசில் இருந்து பொருட்கள் வர்த்தகம் செய்த கிபி முதல் நூற்றாண்டின் ஒரு துறைமுகத்தை வெளிப்படுத்தினார். அகழ்வாராய்ச்சியின் போது இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த போதிலும், கடுமையான மழை மற்றும் வெப்பமண்டல வெப்பத்தால் அகழ்வாராய்ச்சி பாதிக்கப்பட்டது. பின்னர் இவர் மைசூர் அருகே உள்ள பிரம்மகிரியில் ஆறு பெருங்கற்காலம் தொர்பான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார். இது தென்னிந்தியாவின் தொல்பொருளியலுக்கான காலவரிசையைப் பெற அவருக்கு உதவியது.

படைத்த நூல்கள் தொகு

மோர்டிமர் வீலரின் நூல்கள்:[1] and again by Hawkes in her biography.[2]

வெளியிட்டு ஆண்டு நூலின் தலைப்பு இணை ஆசிரியர்கள் வெளீட்டாளர்
1923 Segontium and the Roman Occupation of Wales The Honourable Society of Cymmrodorion (London)
1925 Prehistoric and Roman Wales Clarendon Press (Oxford)
1926 The Roman Fort Near Brecon The Honourable Society of Cymmrodorion (London)
1927 London and the Vikings London Museum (London)
1930 London in Roman Times London Museum (London)
1932 Report on the Excavations of the Prehistoric, Roman and Post-Roman Site in Lydney Park, Gloucestershire Wheeler, TessaTessa Wheeler Oxford University Press for the Society of Antiquaries (London)
1935 London and the Saxons London Museum (London)
1936 Verulamium: A Belgic and Two Roman Cities Wheeler, TessaTessa Wheeler Society of Antiquaries (London)
1943 Maiden Castle, Dorset Society of Antiquaries (London)
1950 Five Thousand Years of Pakistan Christopher Johnson (London)
1953 The Indus Civilization Cambridge University Press (Cambridge)
1954 The Stanwick Fortifications, North Riding of Yorkshire Society of Antiquaries (London)
1954 Archaeology From the Earth Oxford University Press (Oxford)
1954 Rome Beyond the Imperial Frontiers G. Bell and Sons (London)
1955 Still Digging: Adventures in Archaeology Michael Joseph (London)
1957 Hill Forts of Northern France Richardson, Katherine M.Katherine M. Richardson; M. Aylwin Cotton Society of Antiquaries (London)
1959 Early India and Pakistan: To Ashoka Thames and Hudson (London)
1962 Charsada: A Metropolis of the North-West Frontier Government of Pakistan and the British Academy (London)
1964 Roman Art and Architecture Thames and Hudson (London)
1966 Alms for Oblivion: An Antiquary's Notebook Weidenfeld and Nicolson (London)
1968 Flames Over Persepolis Weidenfeld and Nicolson (London)
1970 The British Academy, 1949–1968 Oxford University Press for the British Academy (London)
1976 My Archaeological Mission to India and Pakistan Thames and Hudson (London)

மேற்கோள்கள் தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Piggott 1977, ப. 641–642.
  2. Hawkes 1982, ப. 378.

உசாத்துணை தொகு

மேலும் படிக்க தொகு

  • Jane McIntosh, 'Wheeler, Sir (Robert Eric) Mortimer (1890–1976)', Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004; online edn, September 2012 accessed 11 March 2013

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
கே. என். தீட்சித்
தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1944–1948
பின்னர்
என். பி. சக்கரவர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்டிமர்_வீலர்&oldid=3849289" இலிருந்து மீள்விக்கப்பட்டது