பிரஜ் பாசி லால் அல்லது பி பா லால் (Braj Basi Lal) (பிறப்பு: 2 மே 1921[1]) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1968 முதல் 1972 முடிய பணியாற்றியவர். பின்னர் ஓய்வுக்கு பிறகு சிம்லாவில் உள்ள இந்திய உயர் படிப்பு நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். மேலும் யுனெஸ்கோவின் பல்வேறு குழுக்களில் இணைந்து பணியாற்றியவர்.[2]2000-ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது பெற்றவர்.[2]

பிரஜ் பாசி லால்
The Minister of State for Culture (IC) and Environment, Forest & Climate Change, Dr. Mahesh Sharma releasing the book by the former DG, ASI, Prof. B.B. Lal, on the occasion of Foundation Day of National Museum, in New Delhi.
பிறப்புபிரஜ் பாசி லால்
2 மே 1921 (1921-05-02) (அகவை 102)
ஜான்சி, உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
பணிதலைமை இயக்குநர் (1968 - 1972), இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தொல்லியல் அறிஞர்
அறியப்படுவதுசிந்துவெளி நாகரிகத்தின் காளிபங்கான் தொல்லியல் களம், மகாபாரத நிகழிடங்கள், இராமாயண நிகழிடங்கள்

சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களில் ஒன்றான இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காளிபங்கான் தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்தவர். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[3]

அயோத்தி பிணக்கில் தொகு

இவர் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி வளாகத்தை அகழ்வாய்வு செய்து, 2008-இல் எழுதிய Rāma, His Historicity, Mandir and Setu: Evidence of Literature, Archaeology and Other Sciences எனும் நூலில் கீழ் வருமாறு கூறுகிறார்:

"பாபர் மசூதியின் அடித்தளத்தை தாங்கும் 12 தூண்கள் இந்து கட்டிட கலைநயம் கொண்டதுடன், இந்துக் கடவுள்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தூண்கள் பாபர் மசூதியின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல; இத்தூண்கள் பாபர் மசூதிக்கு அந்நியமானது."[4]

மறைவு தொகு

பி. பி. லால் தமது 101வது அகவையில் உடல்நலக்குறைவால் லக்னோவில் 10 செப்டம்பர் 2022 அன்று காலமானார்.[5]

எழுதிய நூல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Invitation to the fifth chapter of Sanskriti Samvaad Shrinkhla" (PDF). Indira Gandhi National Centre for the Arts. 19 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்பிரல் 2018.
  2. 2.0 2.1 B. B. Lal Chair at IIT Kanpur பரணிடப்பட்டது 20 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம், Indian Institute of Technology, Kanpur website.
  3. "பத்ம விருதுகள்". தி இந்து. சனவரி 21, 2021. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி,2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Ayodhya: High Court relies on ASI's 2003 report". Economic Times. Oct 1, 2010. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
  5. Professor BB Lal, father figure of Indian archaeology, passes away at 101
  6. Winters C (2012). "A comparison of Fulani and Nadar HLA". Indian J Hum Genet 18 (1): 137–8. doi:10.4103/0971-6866.96686. பப்மெட்:22754242. 
  7. 7.0 7.1 Memoirs, On Excavations, Indus Seals, Art, Structural and Chemical Conservation of Monumets, Archaeological Survey of India Official website.

ஆதார நூற்பட்டியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
அமலானந்த கோஷ்
தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1968–1972
பின்னர்
எம். என். தேஷ் பாண்டே


"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பா._லால்&oldid=3777610" இலிருந்து மீள்விக்கப்பட்டது