அமலானந்த கோஷ்
அமலானந்த கோஷ் (Amalananda Ghosh) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1955-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தவர். இவர் இந்திய நாகரிகம் குறித்த பல நூல்களை வெளியிட்டவர்.
அமலானந்த கோஷ் | |
---|---|
பிறப்பு | வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா | 3 மார்ச்சு 1910
இறப்பு | 1981 |
தேசியம் | இந்தியர் |
பணி | தொல்லியல் |
அறியப்படுவது | தலைமை இயக்குநர், இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
3 மார்ச் 1910 அன்று வாரணாசியில் பிறந்த அமலானந்த கோஷ், அலகாபாத்தில் கல்லூரிப் படிப்பு முடித்த பின், இலண்டன் பல்கலைக்கழகத்தின் அகழாய்வு நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.[1][2]
1930-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்த அமலானந்த கோஷ் பின்னர் அத்துறையின் தலைமை இயக்குநராக 1953 முதல் 1968-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[3]
இவர் பணியில் இருந்த போது மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஹோசங்காபாத் மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ள பச்மர்கி[4] பிரம்மகிரி, மஸ்கி, தட்சசீலம், அரிக்கமேடு மற்றும் அரப்பா தொல்லியல் களங்களை அகழாய்வு செய்தார். 1950-இல் இராஜஸ்தான் மாநிலத்தின் சரஸ்வதி ஆறு பாய்ந்த பிகானேர் பகுதிகளில் அகழாய்வு செய்து அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ தொடர்புடைய 70 தொல்லியல் களங்களை கண்டுபிடித்தார். இவர் 1961-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநாக பதவியேற்றார்.
படைப்புகள்
தொகுவிருதுகள்
தொகு- பத்மசிறீ, 1962
மேற்கோள்கள்
தொகு- ↑ Ghosh, Amalananda, The Free Dictionary [1] accessed 24 August 2011.
- ↑ An Encyclopedia of Indian Archaeology, Edited by Amalananda Ghosh [2] பரணிடப்பட்டது 2018-03-28 at the வந்தவழி இயந்திரம் accessed 24 August 2011.
- ↑ Indian Archaeology 1953-1954, A Review [3] பரணிடப்பட்டது 11 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம் accessed 24 Aug. 2011
- ↑ What Lies Beneath, Hindustan Times
- ↑ An Encyclopedia of Indian Archaeology, Google Books
- ↑ A Survey of the Recent Progress in Early Indian Archaeology, Google Books [4]
- ↑ The City in Early Historical India, Google Books
- ↑ A Guide to Nālandā