அரிக்கமேடு
அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து உரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது.[1][2]
அரிக்கமேடு | |
— நகரம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுவை |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து அங்கு செல்ல விரும்புபவர்கள் கடலூர் சாலை வழியாக அரியாங்குப்பம் சென்று அங்கிருந்து வீராம்பட்டினம் செல்லும் சாலையில் "காக்காயந்தோப்பு" என்னும் சிற்றூருக்குச் செல்லவேண்டும். அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது
அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிருத்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியர் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.
1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரேஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச்சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும், சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
படக்கட்சியகம்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Excavations - Important - Pondicherry
- ↑ "ARIKAMEDU". Archived from the original on 2017-04-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-12.