வீராம்பட்டினம்

வீராம்பட்டினம் (Veerampattinam) புதுச்சேரி ஒன்றியப் பகுதியில், அரியாங்குப்பம் ஊராட்சியில் அமைந்த கடற்கரை கிராமம் ஆகும். கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே அமைந்த வீராம்பட்டினம் கிராமம் ஒரு தொல்லியல் களம் ஆகும்.

வீராம்பட்டினம்
கிராமம்
வீராம்பட்டினம் is located in புதுச்சேரி
வீராம்பட்டினம்
வீராம்பட்டினம்
வீராம்பட்டினம் is located in இந்தியா
வீராம்பட்டினம்
வீராம்பட்டினம்
வீராம்பட்டினம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°53′40″N 79°49′27″E / 11.894389°N 79.824139°E / 11.894389; 79.824139
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
வருவாய் வட்டம்புதுச்சேரி
ஊராட்சிஅரியாங்குப்பம் ஊராட்சி
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்அரியாங்குப்பம் ஊராட்சி மன்றம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்தமிழ், பிரெஞ்ச், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
605 007
தொலைபேசி குறியிடு எண்0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /
அரியாங்குப்பம் ஊராட்சியில் அமைந்த வீராம்பட்டினம் கிராமம்

அமைவிடம்

தொகு

அழகிய கடற்கரை கொண்ட வீராம்பட்டின கிராமம், புதுச்சேரி நகரத்திலிருந்து வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள அரியாங்குப்பத்திற்கு கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.

சிறப்புகள்

தொகு

இக்கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டது. இக்கிராமம் அழகிய நீண்ட கடற்கரை கொண்டது. இக்கிராமத்தின் முதன்மைப் பொருளாதாரம் மீன் பிடித்தலாகும்.

தொல்லியல் எச்சங்கள்

தொகு

அரிக்கமேடு தொல்லியல் களத்தை அகழ்வாராய்ச்சி செய்த போது, வீராம்பட்டினம் கிராமத்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமானியர்கள் பயன்படுத்திய சுடுமட்பொம்மைகள், நாணயங்கள், ஆண்/பெண் மற்றும் விலங்குகளின் உருவங்களுடன் கூடிய சுடுமண் ஓடுகள் போன்ற பல தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

கல்வி

தொகு

இக்கிராமத்தில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி என மூன்று அரசுப் பள்ளிகள் உள்ளது.

திருவிழாக்கள்

தொகு
 

இக்கிராம தேவதையான செங்கழுநீர் அம்மன் கோவில் தேர்த்திருவிழா[1] ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மேலும் மாசி மகம் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவின் போது, கிராம தெய்வங்களை கடற்கரையில் எழுந்தருளச் செய்து மக்கள் வழிபடுவர்.

வீராம்பட்டின கடற்கரைக் காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Veerampattinam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீராம்பட்டினம்&oldid=3681688" இலிருந்து மீள்விக்கப்பட்டது