நிரல் மொழிகள் வரலாறு

முதல் இலத்திரனிய கணினியான எனியாக் 1946 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எனியாக் குறியீட்டு முறை மூலம் எனியாக் நிரலாக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே செர்மணியரான கொன்ராட் சூசு பிளேங்கல்குல் என்ற நிரல் மொழி பற்றி 1943 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டு இருந்தார். இது பிற்காலத்திலியே நிறைவேற்றப்பட்டது.

1949 ஆம் ஆண்டு சோட்கோட் (short code) என்ற மேல் நிலை கணினி மொழி அறிமுகப்படுத்தப்பட்டடது. அடிப்படைக் எண்கணிதத்தையும், நிரல் கூறுகளையும் இம் மொழி கொண்டிருந்தது.[1][2][3]

1951 ஆம் ஆண்டு ஏ-ஓ நிரல்மொழிமாற்றி கண்டுபிடிக்கப்பட்டது. முதல் வணிக கணினியான யுனிவாக் 1 இல் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆலிக் இ கிளின்னி ஆட்டோகோட் என்ற நிரல்மொழிமாற்றியைக் அறிமுகப்படுத்தினார்.

போர்ட்ரான்

தொகு

நவீன முதல் நிரல் மொழியாகக் கருதப்படும் போர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1955 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது எண்மிய, அறிவியல் கணித்தலுக்கு இன்றும் பரந்த பயன்பாட்டில் இருக்கிறது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார்.

லிசுப்

தொகு

நிரல் மொழிகளில் பல புத்தாங்களைப் புகுத்திய லிசுப் 1958 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மொழி லம்டா நுண்கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு, கணினி மொழிக் குரிய கணித குறியீடாக அறிமுகமானது. விரைவில் செயற்கை அறிவாண்மை ஆய்வில் இது முக்கிய பங்கு வகித்தது. இன்றும் இது பயன்பாட்டில் உள்ளது. இதை மாசசூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலைய யோன் மேக்கர்தி உருவாக்கினார்.

கோபோல்

தொகு

1972 ம் ஆண்டு பொதுப் பயன்பாட்டு சி மொழி வெளியிடப்பட்டத்து. பெல் தொலைபேசி ஆய்கூடத்தைச் சேர்த டெனிசு ரிச்சி அவர்களால் விருத்தி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. யுனிக்சு இயங்கு தளம் இம் மொழியியிலியே நிறைவேற்றப்பட்டது. உலகில் மிகவும் பரவலாக இன்றும் பயன்படுத்தப்படும் முதல் அல்லது இரண்டாவது மொழி சி ஆகும்.

சீக்குவல்

தொகு

1990 (இணைய யுகம்)

தொகு
  • C Sharp (programming language)
  • Fortress (programming language)
  • F Sharp (programming language)

எதிர்கால தோரணங்கள்

தொகு
  • Parallel programming model
  • meta programming
  • ஒருங்குறி ஆதரவு
  • Reflection (computer science)

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. Knuth, Donald E.; Pardo, Luis Trabb. "Early development of programming languages". Encyclopedia of Computer Science and Technology (Marcel Dekker) 7: 419–493. 
  2. Corrado Böhm's PhD thesis
  3. Fuegi, J.; Francis, J. (October–December 2003), "Lovelace & Babbage and the creation of the 1843 'notes'", Annals of the History of Computing, 25 (4): 16–26, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1109/MAHC.2003.1253887
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரல்_மொழிகள்_வரலாறு&oldid=4100096" இலிருந்து மீள்விக்கப்பட்டது