நிர்மல் குமார் சித்தாந்தா

நிர்மல் குமார் சித்தாந்தா (Nirmal Kumar Sidhanta) என்பவர் லக்னோ பல்கலைக்கழகத்திலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய புகழ்பெற்ற வங்காள இந்திய ஆங்கில இலக்கிய அறிஞர் ஆவார்.

இவர் கல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற கொல்கத்தாவில் உள்ள இசுகாட்லாந்து தேவாலய கல்லூரியிலும் , கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும் படித்தார். முதுகலைப் பட்டம் பெற்ற[1] பின்னர் இசுகாட்லாந்து தேவாலய கல்லூரியில் விரிவுரையாளராகக் கல்விப் பணியினைத் தொடங்கினார்.[2] பின்னர் ஆங்கிலப் பேராசிரியராக லக்னோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, கலைப் பள்ளியின் தலைவராகப் பதவி வகித்தார்.[3] இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 15 மே 1955 முதல் 9 அக்டோபர் 1960 வரை பணியாற்றினார்.[4]

சிந்தாந்தாவிற்கு இந்திய அரசு 1959-ல் பத்ம பூசண் விருதினை வழங்கியது.[5] இவருக்கு 1961-ல் கொல்கத்தா பல்கலைக்கழகம் இலக்கியத்திற்கான கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 586
  2. Teaching Staff: English in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 572
  3. "Appointment and procedure --- from Government of India website". Archived from the original on 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
  4. List of Vice Chancellors of the University of Calcutta His wife Chitralekha Sidhanta (1898-1974) was a renowned exponent of Rabindra Sangeet, a close associate of Rabindranath Tagore. She was one of those very few who popularised Tagore's songs to the masses. பரணிடப்பட்டது 8 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம்
  5. "Padma Bhushan awardees". Archived from the original on 2012-09-04. பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
  6. Honoris Causa பரணிடப்பட்டது 8 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம்