நிர்மல் சந்திர ஜெயின்
நிர்மல் சந்திர ஜெயின் (Nirmal Chandra Jain)(24 செப்டம்பர் 1924 - 22 செப்டம்பர் 2003) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆவார். இவர் 1977-ல் ஜனதா கட்சியின் உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தில் உள்ள சியோனியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இவர் மத்தியப்பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞராக ஆனார். இதன் பிறகு மூத்த வழக்கறிஞராகத் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். பின்னர் இந்திய நிதி ஆணையத்தின் உறுப்பினரானார். ஜெயின் 2003 முதல் இராஜஸ்தானின் ஆளுநராகச் சிறிது காலம் பதவி வகித்தார்.[1][2][3][4]
நிர்மல் சந்திர ஜெயின் | |
---|---|
இராஜஸ்தான் ஆளுநர் | |
பதவியில் 14 மே 2003 – 22 செப்டம்பர் 2003 | |
முன்னையவர் | அன்சுமான் சிங் |
பின்னவர் | கைலாசுபதி மிசுரா |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1977–1980 | |
பின்னவர் | கர்கி ஷங்கர் மிஸ்ரா |
தொகுதி | சியோனி, மத்தியப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 செப்டம்பர் 1928 |
இறப்பு | 22 செப்டம்பர் 2003 | (அகவை 74)Expression error: Unrecognized word "september".
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ரோகிணி தேவி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "6th Lok Sabha Members Bioprofile Nirmal Chandra Jain". மக்களவை (இந்தியா). Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Nirmal Chandra Jain sworn-in as Rajasthan governor". Zee News. 14 May 2003. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
- ↑ "Rajasthan Governor N C Jain passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 September 2003. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
- ↑ "Raj Pramukh & Governors of Rajasthan". Rajbhawan Rajasthan Government. Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.