நிலாக்கல் மகாதேவர் கோயில்

நிலாக்கல் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலானது சிவபெருமானுக்கு அமைப்பட்டதாகும். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சபரிமலை யாத்திரையின் போது கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். [1]

கோயில் நுழைவு வளைவு

அமைவிடம்

தொகு

சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்தக்கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகளும், ரப்பர் தோட்டங்களும் உள்ளன. [2]

வழிபாடு

தொகு

இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். மூலவர் இங்கு உக்ரமூர்த்தி (கடுமையானது) மற்றும் மங்கள பிரதாயகன் (மங்களகரமானது) என்ற இரு நிலைகளில் காணப்படுகிறார். எல்லாக் கோபத்தையும் தீய சக்திகளுக்கு எதிராகப் போரிடும் வகையில் சிவபெருமான் தன் மகன் ஐயப்பனுக்கு அருள்பாலிக்கிறார் என்று நம்புகினறனர். பிற சிவன் கோயில்களில் உள்ளதைப் போலவே, இக்கோயில் வளாகத்திலும் ஏராளமான காளைகள் பாதுகாக்கப்படுகின்றன. [3]

துணைத் தெய்வங்கள்

தொகு

இங்கு கன்னிமூல கணபதி மற்றும் நந்தி ஆகிய இரண்டு துணைதெய்வங்கள் உள்ளன.

பூசைகள்

தொகு

இக்கோயிலில் தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஞாயிறு, திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாள்களும் சிறப்பு நாள்களாகக் கொண்டாடப்படுகின்றன. [4]

விழாக்கள்

தொகு

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ' மகா சிவராத்திரி ' முக்கியமானதாகும். திரு உற்சவம் விழா இங்கு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தம் நலன் வேண்டி சபரிமலை யாத்திரையின் போது செல்கின்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Lord Shiva Temples of Pattanamthitta District". 2016-10-11.
  2. Mathew, Biju (2016-10-11). Pilgrimage to temple heritage.
  3. "Nilakkal Mahadeva Temple, Perunad". 2016-10-30.
  4. "Nilakkal Mahadeva Temple". Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-11.