நிலாச் சுழல்கள்
நிலாச் சுழல்கள் (Lunar swirls )என்பது நிலா மேற்பரப்பு முழுவதும் காணப்படும் புதிரான கூறுபாடுகளாகும். அவை ஒளியியல் அடிப்படையில் முதிர்ச்சியடையாத (அதாவது ஒப்பீட்டளவில் இளம் மண்படிவு) மற்றும் (பெரும்பாலும்) குழி வடிவ ஒளியியல் பண்புகளைக் கொண்டுள்ளன. அவற்றின் வளைவான வடிவம் பெரும்பாலும் குறைந்த வெளிர் பகுதிகளால் காட்டப்படுகிறது , அவற்றின் ஒளிர்வுமிக்க சுழல்களுக்கு இடையில் காற்று வீசுகின்றன. அவை நிலா மேற்பரப்பை பள்ளங்கள், வெளியேற்றும் வைப்புகளில் மேல்நிலைப்படுத்தியதாகத் தோன்றுகின்றன , ஆனால் கவனிக்கக்கூடிய நிலப்பரப்பை வழங்காது. நிலா கடல், மலைப்பகுதிகளில் சுழல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - அவை ஒரு குறிப்பிட்ட பாறையியல் உட்கூறுடன் தொடர்புடையவை அல்ல. மரியாவில் சுழல்கள் வலுவான வெளிர் பிறழ்வுகள், சிக்கலான குழி உருவவியல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன , அதேசமயம் மேட்டுநில நிலப்பரப்பில் உள்ளவை குறைவான சிறப்பு வாய்ந்தவையாகத் தோன்றுகின்றன; மேலும் அவை ஒற்றைச் சுழல்கள் அல்லது பரவலான ஒளிர்புள்ளிகள் போன்ற எளிய வடிவங்களை வெளிப்படுத்துகின்றன.
காந்தப் பிறழ்வுகளுடன் தொடர்பு
தொகுசந்திர சுழல்கள் சந்திரனின் காந்தப்புலத்தின் பகுதிகளுடன் ஒத்துப்போகின்றன. அவை ஒரு கோள் உடலில் ஒப்பீட்டளவில் அதிக வலிமையைக் கொண்டுள்ளன. அவை ஒருபோதும் அதன் சொந்த காந்தப்புலத்தை உருவாக்கும் செயலில் உள்ள மைய மின்னியக்கியைக் கொண்டிருக்காது. ஒவ்வொரு சுழலுக்கும் ஒரு தொடர்புடைய காந்த ஒழுங்கின்மை உள்ளது , ஆனால் ஒவ்வொரு காந்த ஒழுங்கின்மையும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு சுழலைக் கொண்டிருக்கவில்லை. அப்பல்லோ 15, 16 செயற்கைக்கோள்கள் நிலாமுனையம், காகுவாவின் வட்டணைசார் காந்தப்புல வரைபடம் களக் காந்தப்புலப் பகுதிகளைக் காட்டுகிறது. நிலவின் தற்போதைய செயலில் உள்ள உலகளாவிய காந்தப்புலம் இல்லாததால் , இந்தக் களப் பிறழ்வுகள் எச்சக் காந்தவியல் பகுதிகளாகும். அவற்றின் தோற்றம் விவாதத்துக்குரியதாகவே உள்ளது.
உருவாக்கப் படிமங்கள்
தொகுசுழல் உருவாக்கத்திற்கு மூன்று முன்னணி படிமங்கள் உள்ளன. ஒவ்வொரு படிமமும் நிலாச் சுழல்கள் உருவாவதன் இரண்டு பண்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் - அதாவது, சுழலின் ஒளியியல் அடிப்படையில் முதிராமைக்கும் மேலும் அதன் காந்த ஒழுங்கின்மைக்கும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும்.
நிலாச் சுழல்களுடன் தொடர்புடைய காந்தப் பிறழ்வுகளை உருவாக்குவதற்கான படிமங்கள் , பல காந்தப் பிறழ்வுகள் நிலாவில் உள்ள இளைய பெரிய மொத்தல் படுகைகளுக்கு எதிரானவையாக உள்ளதைக் குறிப்பிடுகின்றன.
வால்மீன் மொத்தல் படிமம்
தொகுஇந்த கோட்பாடு சுழல்களின் உயர்வெளிர்வு வால்மீனின் மொத்தலின் விளைவாகும் என்று வாதிடுகிறது. இந்த மொத்தல் வாலின் பகுதியின் கொந்தளிப்பான வளிம, தூசியின் ஓட்டம் மேற்பரப்பு மண்ணடுக்கில் தேம்ஹ்கும். இது புதிய பொருளைப் பரப்பி, தனித்தனி வைப்புகளில் நன்றாக தேய்ந்த நுண்பொருளைக் குவித்தது. இந்தப் படிமத்தின்படி, அதனுடன் தொடர்புடைய வலுவான காந்தப் பிறழ்வுகள், மீவேக வளிம மோதல்கள், வாலின் நுண்தூசிகளும் நிலா மேற்பரப்பைத் தாக்கி, அந்த நுண்தாக்கங்களால் கியூரி வெப்பநிலைக்கு மேலே வெப்பமடைய செய்யும் மேற்பரப்புப் பொருட்களின் காந்தமயமாக்கலின் விளைவாகும். வால்வெள்ளி மொத்தல் படிமத்தை ஏற்பவர்கள் முதன்மைப் படுகைகளில் சுழல்கள் எதிர்முறைமை நிகழ்வைத் தற்செயலாகவோ அல்லது சுழல் இடங்களின் முழுமையற்ற பகுதியின் கள விளைவாகவோ ஏற்படுவனவாகக் கருதுகின்றனர்.[1]
சூரியக் காற்றுக் கவசப் படிமம்
தொகுகாந்த ஒழுங்கின்மை காரணமாக, சூரியக் காற்றிலிருந்து வெளிர்நிற நிலா மண் பாதுகாக்கப்படுவதால் சுழல்கள் உருவாகின்றன என்று இந்தக் கோட்பாடு வாதிடுகிறது. சுழல்கள் வெளிப்படும் சிலிக்கேட்டுப் பொருட்களைக் நோக்குகின்றன. அவற்றின் வெளிர்வுகள் சூரியக் காற்று இயனித் திரள்வீச்சின் விலகல் மூலம் விண்வெளி வானிலை விளைவுகளிலிருந்து காலப்போக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தப் படிமத்தின்படி, வெளிப்படும் சிலிக்கேட் மேற்பரப்புகளின் ஒளியியல் முதிர்ச்சி சூரியக் காற்று இயனித் திரள்வீச்சின் விளைவாகும். இந்தப் படிமவகைச் சுழல் உருவாக்கம் என்பது காந்த ஒழுங்கின்மை உருவாக்கப்பட்ட பிறகு தொடங்கிய ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகும் என்று கூறுகிறது.
2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணித உருவகப்படுத்தல்கள் , எரிமலைக் குழம்புவழிகள் குளிர்ச்சியடையும்போது காந்தமாக மாறியிருக்கலாம் என்பதைக் காட்டின. இவை நிலாச் சுழல்களின் நோக்கீடுகளுடன் ஒத்துப்போகும் காந்தப்புலத்தை வழங்குகின்றன.[2]
தூசி இயக்கப் படிமம்
தொகுஇந்தக் கோட்பாடு , மேலோட்டுக் காந்தப் பிறழ்வுகளுக்கும் சூரியக் காற்றின் மின்மத்துக்கும் இடையிலான தொடர்புகளால் உருவாக்கப்பட்ட மென்மின் புலங்களால் மின்னூட்டம் அடைந்த நுண்தூசியை ஈர்க்கும் அல்லது விரட்டும் என்று வாதிடுகிறது. உயர்வெளிர்வுள்ள பெல்ட்சுபாரியப் பொருள் நிலா மண்ணின் மிகச்சிறந்த துகள்களின் பரவலின் கூறாகும். நிலாமுனைக் கடப்புகளின்போது மேற்பரப்புக்கு மேலே உயர்த்தப்பட்ட தூசியின் நிலைமின்னழுத்த இயக்கம் இந்தப் பொருளைக் குவித்து ஒளிர் சுழல் வடிவங்களை உருவாக்கக்கூடும்.[3]
செயற்கைக்கோள் அளவீடுகள்
தொகுநிலாச் சுழல்களின் காந்த நோக்கீடுகள் கிளெமென்டைன், லூனார் ப்ராஸ்பெக்டர் உள்ளிட்ட பல நிலா விண்கலங்களால் நடத்தப்பட்டுள்ளன. இந்த நோக்கீடுகளின் முடிவுகள் வால்மீன் தாக்கப் படிமத்துடன் பொருந்தாது.[4] நிலா மதிப்பீட்டுச் சுற்றுகலனின் நோக்கீடுகள் சூரியக் காற்று காந்தப்புலத்தால் திசைதிருப்பப்படுகிறது என்ற கோட்பாட்டைக் குறிக்கின்றன.
சந்திரயான் - 1 இல் உள்ள நிலாக் கனிமவியல் வரைவி எடுத்த கதிர்நிரல் நோக்கீடுகள் , இலகுவான நிறப் பகுதிகளில் ஐதராக்சைடு குறைபாடு இருப்பதை உறுதிப்படுத்தின , இது வெளிர் பகுதிகளில் சூரியக் காற்று திசைதிருப்பப்படுகிறது என்ற கருதுகோளை குறிக்கிறது.[5]
2018[update] ஆம் ஆண்டளவில் நாசாவில் ஆய்வில் உள்ள கியூபுசாட்(CubeSat) திட்டக் கருத்துவடிவம், நிலாச் சுழல்கள் உருவாக்கத்தைப் புரிந்துகொள்ளும் இலக்குடையதாகும். முன்மொழியப்பட்டுள்ள நிலாச் சுழல்களுக்கு மேலுள்ள வளிமண்டலத்தின் இருகோள்வழி நோக்கீடுகள் அல்லது போலாசு திட்டம் இரு செயற்கைக்கோள்களைக் கொண்டதாகும். இதில் ஒன்று 25 கிமீ உயரத்தில் உயர்வட்டணையிலும் மற்றொன்று 6 கிமீ உயரத்தில் தாழ்வட்டணையிலும் சுற்றிவரும்.[6][7]
கள ஆய்வுகள்
தொகுநாசா , அங்குள்ள மேற்பரப்பு பொருட்களின் கள நோக்கீடுகளைப் பெற இரெய்னர் காம்மா பகுதிக்கு ஒரு தரையூர்தியை அனுப்ப முன்மொழிந்துள்ளது. ஜான்சு ஆப்கின்சு பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தால் நடத்தப்படும் நிலா சுழிப்பு அல்ல்லது சுழல் திட்டம் ஒரு தரையிறங்கியையும் தரையூர்தியையும் 2024 பயணத்தில் அனுப்ப திட்டமிடுகிறது. பல்வகை நுண்ணோக்கியை சுமந்து செல்லும் தரையூர்தி மேற்பரப்பு துகள்களின் கரடுமுரடான தன்மையையும் ஒளிர்வுத் தன்மையையும் தீர்மானித்து அத்தரவை த்ரையிரங்கிக்கு அனுப்பும் , இது புவித்தளக் கட்டுபாட்டு நிலையத்துடன் (கையாளுபவர்களுடன்) தொடர்பு கொள்ளும்.[8][9][10]
மேலும் காண்க
தொகு- நிலாவின் பெயர்நிலை நிகழ்வுகள் என்பன நிலாப் பரப்பில் தோன்றும் குறுநேர ஒளி, நிற, மாற்றங்களின் தோற்ற நிகழ்வுகளாகும்
- வெளிர்வுக் கூறுபாடுகள் என்பன சுற்றியுள்ள சூழலை விட ஒளிர்மை வேறுபடும் நிலப்பரப்புப் பகுதியாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Crashing Comets May Explain Mysterious Lunar Swirls - SpaceRef". spaceref.com. 1 June 2015. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Lunar Swirls Point to the Moon's Volcanic Magnetic Past". spaceref.com. 6 September 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Steigerwald, Bill (28 April 2016). "Lunar Tattoos: New Clues". NASA. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
- ↑ Blewett, David T.; Coman, Ecaterina I.; Hawke, B. Ray; Gillis-Davis, Jeffrey J.; Purucker, Michael E.; Hughes, Christopher G. (3 February 2011). "Lunar swirls: Examining crustal magnetic anomalies and space weathering trends". Journal of Geophysical Research 116 (E2): E02002. doi:10.1029/2010JE003656. Bibcode: 2011JGRE..116.2002B.
- ↑ Kramer, Georgiana Y.; Besse, Sebastien; Dhingra, Deepak; Nettles, Jeffrey; Klima, Rachel; Garrick-Bethell, Ian; Clark, Roger N.; Combe, Jean-Philippe et al. (9 September 2011). "M spectral analysis of lunar swirls and the link between optical maturation and surface hydroxyl formation at magnetic anomalies". Journal of Geophysical Research 116: E00G18. doi:10.1029/2010JE003729. Bibcode: 2011JGRE..116.0G18K.
- ↑ Jenner, Lynn (8 August 2017). "NASA Studies Tethered CubeSat Mission to Study Lunar Swirls". NASA. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
- ↑ Bi-Sat Observations of the Lunar Atmosphere Above Swirls (BOLAS): Tethered SmallSat Investigation of Hydration and Space Weathering Processes at the Moon.
- ↑ Sam Zlotnik (2 November 2022). "A dynamic duo will help demystify the magnetic secrets of the lunar swirls". Smithsonian Magazine. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
- ↑ Johns Hopkins Applied Physics Laboratory. "Lunar Vertex: Solving mysteries swirling around the Moon's magnetic regions". APL Civil Space. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
- ↑ Johns Hopkins APL. "Lunar Vertex - solving a magnetic mystery". APL Civil Space. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் நிலாச் சுழல்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் காண்க
தொகு- நிலா பெயர்நிலை நிகழ்வு