நிலா பெண்ணே

1990 திரைப்படம்

நிலா பெண்ணே (Nila Pennae) என்பது 1990 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். வி. தமிழழகன் இயக்கிய இப்படத்தில் திவ்ய பாரதி, ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். துணை வேடங்களில் வெண்ணிற ஆடை மூர்த்தி, சனகராஜ் ஆகியோர் நடித்தனர். ஆர். எம். வீரப்பன் தயாரித்த இந்தப் படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார். இப்படமானது 1990 சூலை 5 அன்று வெளியிடப்பட்டது.[1]

நிலா பெண்ணே
Theatrical release poster
இயக்கம்வி. தமிழழகன்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
கதைவி. தமிழழகன்
ஆர். பி. விஸ்வம் (உரையாடல்)
திரைக்கதைவி. தமிழழகன்
இசைவித்தியாசாகர்
நடிப்புஆனந்த்
திவ்ய பாரதி
வெண்ணிற ஆடை மூர்த்தி
சனகராஜ்
ஒளிப்பதிவுஏ. வி. தாமஸ்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்சத்தியா மூவிஸ்
விநியோகம்சத்தியா மூவிஸ்
வெளியீடு5 சூலை 1990 (1990-07-05)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆனந்த் நகரத்தில் வசிக்கும் ஒரு இளைஞன். நகர வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் அவதியுறுகிறான். அதிலிருந்து விடுபட காட்டுக்குள் உள்ள ஒரு கிராமத்தில் சிறிது காலம் தங்க முடிவு செய்கிறான். அங்கு ஒரு வயதான குருவால் உருவாக்கப்பட்ட ஒரு பெண்ணை (திவ்ய பாரதி) சந்திக்கிறான். அவளைக் கண்டதும் ஆனந்த் காதல் கொள்கிறான். ஆனந்த் அவளை சூர்யா என்று அழைக்கிறான். அவள் அவனுக்கு வாழ்க்கையின் அழகைக் காட்டுகிறாள்.

நடிப்பு

தொகு

வெளியீடு

தொகு

படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியடைந்தது.[2][3]

இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். பாடல்கள் 1989 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.[4][5]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம்
1 "அடி ராசாத்தி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 0:44
2 "கிச்சாங் கிச்சாங்" சித்ரா, கங்கை அமரன் புலமைப்பித்தன் 05:14
3 "மனசுக்கு வயசென்ன" சித்ரா வாலி 04:53
4 "ஒத்த குயிலு" சுவர்ணலதா, எஸ். பி பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 04:39
5 "புது உறவு" கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா வைரமுத்து 04:47
6 "ராத்திரி மெல்ல" 1 எஸ். பி பாலசுப்பிரமணியம், சித்ரா வாலி 05:14
7 "ராத்திரி மெல்ல" 2 மலேசியா வாசுதேவன், சித்ரா வாலி 05:14
8 "தலையில் கிரீடங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து 04:33

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900705&printsec=frontpage&hl=en
  2. "Divya Bharti Bio | Divya Bharti Career | MTV". mtv.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-02.
  3. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900713&printsec=frontpage&hl=en
  4. "Nila Penne". youtube. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
  5. "Nila Penne Songs". saavn. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலா_பெண்ணே&oldid=4048071" இலிருந்து மீள்விக்கப்பட்டது