நிலோபர் ரஹ்மானி

நிலோபர் ரஹ்மானி (Niloofar Rahmani) (பாரசீக மொழி: نیلوفر رحمانی‎, born 1992) இவர் ஆப்கானித்தான் நாட்டில் 2001 ஆம் ஆண்டில் தாலிபான்களின் விழ்ச்சிக்குப் பின்னர் ஆப்கானிசுதானின் முதல் பெண் விமான இராணுவ விமான ஓட்டுனராக பயிற்சி பெற்று வேலையில் தேர்வானார். இவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தபோதிலும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து 2015 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவில் வழங்கப்படும் சர்வதேச துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதினை பெற்றுள்ளார்.[1]

நிலோபர் ரஹ்மானி
نیلوفر رحمانی
தாய்மொழியில் பெயர்نیلوفر رحمانی
பிறப்பு1992 (அகவை 31–32)
காபூல், ஆப்கானித்தான்
பணிவிமானி
செயற்பாட்டுக்
காலம்
2012–present
அறியப்படுவதுஆப்கானிசுதானின் முதல் பெண் விமானி
2013 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அன்று இளங்கலை பைலட் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட பட்டதாரிகள் இணைந்து எடுக்கப்பட்ட படம்

வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

1992 ஆம் ஆண்டு ஆப்கானிசுதானில் பிறந்த இவர் விமான ஓட்டியாக படித்து வெற்றிபெற்றார். இவர் 2010 ஆண்டு சூலை மாதம் ஆப்கானிசுதான் விமானப்படையில் பயிர்சியில் சேர்ந்து 2012 ஆம் ஆண்டு ஆய்தப்படையில் இரண்டாம் நிலை அதிகாரியாக சேர்ந்தார்.[2] தன் தந்தையுடன் சோவியத் ஒன்றிய படையில் இரண்டு பெண் விமானிகள் வேலை செய்ததைப் பார்த்து இவரும் இந்த வேலைக்கே படித்தார். இவர் முதல் முதலில் தனியாக இயக்கிய விமானத்தின் பெயர் செஸ்னா 182 என்பதாகும்.[3]

தஞ்சம்

தொகு

அனைவரும் ஆப்கானிசுதான் படையில் பணிபுரிவார் என்று எதிபார்த்திருந்தபோது அவரின் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அமெரிக்காவிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.[4]

References

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலோபர்_ரஹ்மானி&oldid=3905236" இலிருந்து மீள்விக்கப்பட்டது