நில்சா வாங்மோ

நில்சா வாங்மோ (Nilza Wangmo) (பிறப்பு: 1979கள்) ஒரு இந்திய உணவக உரிமையாளரும், வட இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் உள்ளூர் உணவுக்கான ஆர்வலருமாவார். இவர் செய்த பணிகளுக்காக 2019இல் இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது

நில்சா வாங்மோ
2020இல் நில்சா
பிறப்பு1979
அல்ச்சி
தேசியம் இந்தியா
கல்விதொண்டு நிறுவனப் பள்ளி
பணிஉணவக உரிமையாளர்
அறியப்படுவதுநாரி சக்தி விருது பெற்றவர்

வாழ்க்கை

தொகு

இந்தியாவின் லடாக்கின் லே மாவட்டத்திலுள்ள அல்ச்சி என்ற கிராமத்தில் 1979களில் பிறந்தார் . இவரது தந்தை இறந்தவுடன் இவரது தாய் தனது பெற்றோர்களின் கிராமமான ஸ்டோக் என்ற மலைகளால் சூழப்பட்ட கிராமத்தில் இவரை வளர்த்தார். அங்கு இவர் ஒரு தொண்டு நிறுவனப் பள்ளிக்குச் சென்றார். அதே நேரத்தில் இவரது தாயார் குறைந்த ஊதியத்தில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். [1] தனது கல்லூரித் தேவைகளுக்குக்கூட தொகை செலுத்த முடியாத நிலையில் இவரது குடும்பம் வறிய நிலையில் இருந்தது. [2] இவரது தாயின் தந்தை 2014 இல் இறந்தார்.

உணவகம்

தொகு

வணிகக் கடனைப் பயன்படுத்தி வாங்மோ 2016இல் "அல்ச்சி கிச்சன்" என்ற உணவகத்தைத் தொடங்கினார். உணவகம் இவரது வீட்டிற்கு மேலேயே அமைந்திருந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கும், மலையேறுபவர்களுக்கும் ஒரு ஈர்ப்பாக இருந்தது. தங்கள் உணவகத்த்தின் விளம்பரத்திற்காக சிறுதளவு கொஞ்சம் பணம் செலவிட்டனர். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே வணிகம் நன்றாக விரிவடைந்தது. <[1] பிரபலமான பார்வை இருந்தபோதிலும், உள்ளூர் பாரம்பரிய உணவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று இவர் நம்பினார். [2] இவரும் இவரது தாயும் சேர்ந்து வேகவைத்த பாலாடைகொண்டு தயாரிக்கப்படும் சுடகி என்கிற மோமோவை விற்பனை செய்து வந்தனர். [2]

இவரது உணவு பாராட்டப்பட்டது. மேலும், 2019ஆம் ஆண்டில் தனது உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் தனது தொழிலை விரிவுபடுத்தினார். இப்பகுதியில் ஆண் சமையல்காரர்களின் பாரம்பரியம் இல்லாததால், இவர் சிறுமிகள் அல்லது பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவதாக கூறுகிறார். [1]

விருதுகள்

தொகு
 
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாரி சக்தி விருதினை நில்சா வாங்மோவுக்கு வழங்கினார்

2019 ஆம் ஆண்டில் இவர் செய்த பணிகள் இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த விருதுடன் அங்கீகரிக்கப்பட்டன. <[2] 2020 ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. இவருடன் சேர்ந்து பதினைந்து பெண்களுக்கு இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர். [3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Shali, Pooja (November 2, 2019). "Meet a woman chef who beat all odds to spread the taste of Ladakh". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  2. 2.0 2.1 2.2 2.3 "Lost Her Dad, Had to Leave College: Today, She Is Taking Ladakh's Food to the World". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  3. "President of India Confers Nari Shakti Puraskar for 2019". ddnews.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  4. "President gives Nari Shakti Puraskar". ddnews.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  5. "Nilza Wangmo to get Nari Shakti Puraskar for promoting Ladakhi cuisines". Business Standard India. 2020-03-08. https://www.business-standard.com/article/news-ani/nilza-wangmo-to-get-nari-shakti-puraskar-for-promoting-ladakhi-cuisines-120030800174_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நில்சா_வாங்மோ&oldid=3400324" இலிருந்து மீள்விக்கப்பட்டது