நிவேதா மு. முருகன்

நிவேதா மு. முருகன் (Nivedha M. Murugan) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். மயிலாடுதுறை, தரங்கம்பாடியினைச் சார்ந்த இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர். இவர் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] [2]. இத்தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகார் தொகுதியில் இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அ.தி.மு.க-வைச் சேர்ந்த பவுன்ராசை இவர் தோல்வியுறச் செய்தார்.[3]

நிவேதா மு. முருகன்
MLA of Poomphuhar Legislative Assembly, TN.png
முன்னவர் எஸ். பவுன்ராஜ்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
தொகுதி பூம்புகார்
தனிநபர் தகவல்
பிறப்பு இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்தொகு

  1. "Profile".
  2. "Nivedha" (7 May 2021).
  3. வெங்கடேஷ், மு இராகவன்,பா பிரசன்ன. "பேரிடர் காலத்தில் தாராள உதவி..! - பூம்புகார் தொகுதியை தி.மு.க வெற்றிகொண்டது எப்படி?" (ta).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதா_மு._முருகன்&oldid=3294736" இருந்து மீள்விக்கப்பட்டது