நிஷி வாசுதேவா

நிஷி வாசுதேவா, (பிறப்பு 30 மார்ச் 1956) இந்தியாவின் தில்லியைச் சேர்ந்த வணிக நிர்வாகியும், இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் (HPCL) [2] முன்னாள் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குனராக, 1 மார்ச் 2014 முதல் 31 மார்ச் 2016 வரை பொறுப்பேற்று வழிநடத்தின பெண் தலைவருமாவார். இந்நிறுவனம் இந்தியஅரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும். மேலும் இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் வருவாய் அடிப்படையில் நான்காவது பெரிய நிறுவனமாகும். நவரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.[3] [4] [5] [6]

நிஷி வாசுதேவா
பிறப்பு30 மார்ச்1956
தேசியம்இந்தியர்
கல்விஇளங்கலை பொருளாதாரம், முதுகலை வணிக மேலாண்மை இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தாவில்
பணிவணிக நிர்வாகி
பணியகம்இந்துஸ்தான் பெட்ரோலியம்
விருதுகள்பிசினஸ் டுடே (இந்தியா) வழங்கிய இந்திய வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் [1]

கல்விப்பின்னணி தொகு

நிஷி, தனது பள்ளிக்கல்வியை லொரேட்டோ கான்வென்ட் பள்ளி, டெல்லியிலும், தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மகளிர் கல்லூரியான சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் இளங்கலை படிப்பில், கௌரவ பொருளாதாரம் சார்ந்து 1972 முதல் 1975 ஆண்டு வரை படித்துள்ளார். மேலும் 1977 ஆம் ஆண்டு கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்றுள்ள பட்டதாரியுமாவார்.

தொழில் தொகு

நிஷி, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் பெட்ரோலிய துறையுடன் சம்பந்தப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு முதல் அத்துறையில் இல்ல பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து, 1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆவது ஆண்டு வரை பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தியுள்ளார், வாடிக்கையாளர் சேவை மற்றும் உற்பத்தி துறை மற்றும் பெருநிறுவன மூலோபாயத்துறை போன்றவைகளில் பொது மேலாளராகவும்,  தகவல் அமைப்பு, எல்பிஜி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் நிர்வாக இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

முதன்மை நிர்வாக இயக்குனராக பதவியேற்பதற்கு முன்பு, சந்தைப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்பு பிரிவின்  இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார், [7] மொத்தமாக பெட்ரோலியத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர்[8], தற்போது, ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட், எல்&டி இன்ஃப்ரா கிரெடிட் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட், எல்&டி ஃபைனான்ஸ் லிமிடெட், எல்&டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட், ஏட்ரியா கன்வர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இத்துறையில் பல்வேறு விருதுகளையும் நிஷி பெற்றுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Mahajan, Anilesh S. (31 August 2014). "Leading the Way". Business Today. https://www.businesstoday.in/magazine/cover-story/hindustan-petroleum-nishi-vasudeva-rupee/story/209155.html. பார்த்த நாள்: 20 August 2018. 
  2. "Nishi Vasudeva to take over as HPCL chief". The Times of India. 22 August 2013.
  3. "Nishi Vasudeva". Fortune (in ஆங்கிலம்). 2015-09-14. Archived from the original on 2019-01-03. பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.
  4. "Nishi Vasudeva selected to head HPCL". Zee News. 21 August 2013.
  5. "HPCL head,the first woman ever to head a Navratna PSU". The Statesman. 22 August 2013.
  6. "Nishi Vasudeva takes over as HPCL chief". Business Standard India. http://www.business-standard.com/article/pti-stories/nishi-vasudeva-takes-over-as-hpcl-chief-114030100341_1.html. 
  7. "Press Release: Ms. Nishi Vasudeva appointed as Director (Marketing) of HPCL". HPCL official website.
  8. "Nishi Vasudeva likely to be HPCL's first woman chief". The Hindu Business Line. 21 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஷி_வாசுதேவா&oldid=3713427" இலிருந்து மீள்விக்கப்பட்டது