நீடியோசின் யூடாக்சசு

நீடியோசின் யூடாக்சசு (கிரேக்க மொழி: Εὔδοξος ὁ Κνίδιος Eúdoxos ho Knídios; 408 கி.மு – 355 கி.மு) ஒரு பண்டைக் கிரேக்க வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். இவர் பிளேட்டோவின் மாணவர். இவரது மால ஆக்கங்கள் அனைத்தும் கிடைக்காமல் போன போதிலும் இவரது படைப்புக:ளின் மூலமான அறிவை அராடசின் வானியல் கவிதைகள் முதலானவற்றிலிருந்து அறியமுடிகின்றது.

நீடியோசின் யூடாக்சசு
பிறப்பு408 BC, 390s BC
Knidos
இறப்பு355 BC (அகவை 0)
Knidos
பணிஎழுத்தாளர், geographer

வாழ்க்கை வரலாறுதொகு

இவரது பெயரிலுள்ள யூடாக்சசு என்பது "மதிப்பார்ந்த" அல்லது "நற்பெருமைக்குரிய" (கிரேக்கம் εὔδοξος) எனும் பொருளுடையது. யூடாக்சசுவின் தந்தை நீடியோசின் அய்சினச்சு இரவில் நட்சத்திரங்களை அவதானிப்பதில் விருப்புடையவர். யூடாக்சசு முதன்முதலில் தாரந்தோவிற்கு பயணித்தது அர்ச்சிடாசுடன் கற்பதற்காக ஆகும்.to ஆர்ச்சிடாசிடம் தான் இவர் கணிதம் கற்றார். மருத்துவம் கற்பதற்காக இத்தாலியில் இருந்த போது, சிசிலிக்குப் பயணித்தார்.