நீதா அசோக்
நீதா அசோக் (Neetha Ashok) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் கன்னடப் படங்களில் முதன்மையாக நடித்து வருகின்றார்.[3] இவர் 2019ஆம் ஆண்டு வெளியான ஜபர்தஸ்த் சங்கரா என்ற துளு மொழித் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடத்தில் விக்ராந்த் ரோனா (2022) மூலம் நீதா அங்கீகாரம் பெற்றார்.[4]
நீதா அசோக் | |
---|---|
பிறப்பு | நீதா அசோக் கெர்லே 01 பிப்ரவரி 1991[1] கோட்டா, உடுப்பி மாவட்டம், கருநாடகம், இந்தியா[2] |
கல்வி | முதுநிலை வணிக நிர்வாகம் (நிதி)[2] |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2014-முதல் |
பெற்றோர் | அசோக் கெர்லே (தந்தை), கீதா (தாய்)[2] |
இளமை
தொகுகருநாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த கடலோரப் பகுதி கிராமமான கோட்டா கிராமத்தில்[2] கோட்டா பிராமணக் குடும்பத்தில் பிறந்த நீதா, தில்லி, மங்களூரு மற்றும் பெங்களூருவில் வசித்துள்ளார்.[5][6] இவரது தந்தை அசோக் கெர்லே, ஒரு வங்கியாளர்; இவரது தாய் கீதா அசோக் கெர்லே. இவர் தன்னை சிவராம் கராந்தின் கொள்ளுப் பேத்தி என்று அழைக்கிறார்.[5]
தொழில் வாழ்க்கை
தொகுயசோதே, நா நின்னா பிடாலாரே, நீலம்பரி உள்ளிட்ட மூன்று கன்னடத் தொலைக்காட்சி தொடர்களிலும், தூர்தர்ஷனில் ஓர் இந்தி தொடர்களிலும் நீதா அசோக் நடித்தார்.[5] தேவதாசு கபிகாட் இயக்கி இவரது பள்ளி மூத்த தோழர் நடிகர் அர்ஜுன் கபிகாட் நடித்த ஜபர்டசுத் சங்கரா என்ற துளு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.[6][7] கன்னட விருந்து ஒன்றில் நடிகர் சுதீப் சந்தித்த பிறகு விக்ராந்த் ரோனா (2022) மூலம் கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[7]
திரைப்படவியல்
தொகுதிரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | |
---|---|---|---|---|
2019 | ஜபர்டஸ்த் சங்கரா | லாவண்யா | துளு | [6] |
2022 | விக்ராந்த் ரோனா | அபர்ணா பல்லால் "பன்னா" | கன்னடம் | [8][9] |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | மேற்கோள்கள் |
---|---|---|---|---|
2014 | யசோதே | யசோதா | கன்னடம் | [10] |
2016 | நா நின்னா பிடாலாரே | நந்தினி | கன்னடம் | [5] |
ஆஷியன் | இந்தி | [5] | ||
2018 | நீலம்பரி | கன்னடம் | [11] |
விருதுகள்
தொகுஆண்டு | விருது | வகை | திரைப்படம் | விளைவு | |
---|---|---|---|---|---|
2023 | 11வது தென்னிந்திய பன்னாட்டு திரைப்பட விருதுகள் | சிறந்த அறிமுக பெண்-கன்னடம் | விக்ராந்த் ரோனா | வெற்றி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Happy birthady to Neetha Ashok of #VikrantRona fame". Bangalore Times Twitter. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "ವಿಕ್ರಾಂತ್ ರೋಣ ಸಿನಿಮಾಗೆ ನೀತಾ ಅಶೋಕ್ ಸೆಲೆಕ್ಟ್ ಆಗಿದ್ದು ಹೇಗೆ?". YouTube. 27 February 2021. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
- ↑ "Serial actors perform at Chitradurga". The Times of India. 14 October 2018. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- ↑ A. Sharadhaa (21 July 2022). "Debuting with Vikrant Rona is like getting golden gift: Neetha Ashok". The New Indian Express. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4
- SHASHIPRASAD SM (18 August 2018). "A scary act". Deccan Chronicle. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- "Naa Ninna Bidalare completes 500 episodes successfully". 17 April 2018. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- ↑ 6.0 6.1 6.2 KM Sathish Bellanki (8 November 2019). "ನೀತಾ ನಟನಾ ವೈಖರಿ". Prajavani (in கன்னடம்). Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- ↑ 7.0 7.1 A. Sharadhaa (13 February 2021). "Neetha Ashok: I am just lucky". The New Indian Express. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- ↑ "Actress Neetha Ashok's look from Phantom revealed". The Times of India. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- ↑ "Chittara Star Awards". awards.chittaranews.com.
- ↑
- A. Sharadhaa (20 August 2020). "Neetha Ashok gets her first big break in 'Phantom'". Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- "Sharadha to get married in Yashode serial". 1 January 2015. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- ↑
- "Neetha returns to the small screen". 9 August 2018. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- "Neelambari to go on air from October 8". 30 September 2018. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Neetha Ashok
- பாலிவுட் கங்காமா இணையதளத்தில் நீதா அசோக்