நீர்வளூர்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
நீர்வளூர் (Neervalur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சீபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த சிற்றூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. இங்கு 500அண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான வீற்றிருந்த இலட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[1] இக்கோயிலில் உக்கிர நரசிம்மர் சன்னதியும் உள்ளது.
நீர்வளூர்
சிறீபாசியபுரம் | |
---|---|
சிற்றூர் | |
நீர்வளூர், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°52′42″N 79°47′12″E / 12.8783°N 79.7868°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஏற்றம் | 89.72 m (294.36 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN-21 |
தொன்மம்
தொகுஇது கடந்த காலத்தில் ஸ்ரீ பாஷ்யபுரம் என்றும் அழைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது இராமானுசரால் எழுதப்பட்ட ஸ்ரீ பாஷ்யத்தை நினைவூட்டுகிறது.[2] இன்றும் இங்குள்ள கோயில் அகோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arulmigu Vittriruntha Lakshmi Narayanaperumal Temple, Neervalur - 631561, Kancheepuram District [TM002744].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.
- ↑ "Sri Lakshmi Narayana Perumal Temple, Neervalur, Kanchipuram". columbuslost.com. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.