நீர்வளூர் வீற்றிருந்த இலட்சுமி நாராயண பெருமாள் கோயில்
வீற்றிருந்த இலட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2] இக்கோயிலில், உக்கிர நரசிம்மர் சன்னதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
வீற்றிருந்த இலட்சுமி நாராயண பெருமாள் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 12°54′18″N 79°47′24″E / 12.905055°N 79.789905°E |
பெயர் | |
பெயர்: | வீற்றிருந்த இலட்சுமி நாராயண பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | நீர்வளூர் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வீற்றிருந்த இலட்சுமி நாராயண பெருமாள் |
சிறப்பு திருவிழாக்கள்: | பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகம், பங்குனி உத்தரம், மாசி மகம், கார்த்திகை விளக்கீடு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 92.71 மீ. உயரத்தில், (12°54′18″N 79°47′24″E / 12.905055°N 79.789905°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 15 கி. மீ. தூரத்திலுள்ள நீர்வளூர் பகுதியில், 'வீற்றிருந்த இலட்சுமி நாராயண பெருமாள் கோயில்' அமையப் பெற்றுள்ளது.[3]
புராண முக்கியத்துவம்
தொகுஒரு சமயம் இந்த ஊருக்கு விசயம் செய்த ஔவையார், இங்கு தனக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதால், இந்த ஊரை தண்ணீர் இல்லாமல் செய்ய சபித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. எனவே, இவ்வூர் வறண்ட பூமியாகி விட்டது. பின்னாளில், இராமானுசர், நரசிம்மரை வேண்டி, இத்தலத்தின் வறட்சியைப் போக்கி, நீர்வளம் மிக்கதாக்க வேண்டினார். நரசிம்மரும் மழையைத் தருவித்து நீர்வளம் செழிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.[4]
திருவிழாக்கள்
தொகுபிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்தரம் மற்றும் கார்த்திகை விளக்கீடு ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ London Swaminathan (2022-09-08). Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu. Pustaka Digital Media.
- ↑ London Swaminathan (2022-09-11). The Wonder That Is Hindu Temple (in ஆங்கிலம்). Pustaka Digital Media.
- ↑ "Neervalur Perumal Temple, நீர்வளூர், Sri Lakshmi Narayana Perumal, ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில்". www.divyadesam.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.
- ↑ lightuptemple (2022-04-02). "Neervalur Lakshmi Narayana Perumal Temple, Kanchipuram". lightuptemples (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.