நீர் நில நச்சுயிரிகள்

நச்சுத் தன்மையுடைய நீர் நில வாழ்வன (Poisonous amphibians) எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள நச்சுக்களை உற்பத்திச் செய்கின்றன. .

விஷ டார்ட் தவளைகள் அதனுடைய பிரகாசமான நிறமுள்ள சருமம் காரணமாக நன்கு அறியப்பட்டவை. இவ்வண்ணத்தின் மூலம் அவை தம்மை வேட்டையாட வருபவர்களை எச்சரிக்கின்றன.

ஒரு சில சாலமண்ட்ரிட் சாலமண்டர்களைத் தவிர, [1] [2] இரண்டு வகையான தவளைகள் தங்கள் மண்டை ஓடுகளில் விசம்-கொண்ட எலும்புத் துளைகளைக் கொண்டுள்ளன. பொதுவாக நீர் நில வாழ்வன விசமுடையன அல்ல. பெரும்பாலான விசமுடைய நீர் நில வாழ்வன, தொடுவது அல்லது உண்பதால் விசமுடைய என அறியப்பட்டுள்ளன. இவை இந்த விசத்தன்மையினை தாம் உணவாக அருந்தும் விச தாவர, பூச்சிகளிடமிருந்தே பெறுகின்றன. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, விச டார்ட் தவளை . இவை மழைக்காடுகளில் உள்ள விச உணவை உட்கொள்வதால் லிபோபிலிக் ஆல்கலாய்டு என்ற கொடிய வேதிப்பொருளைப் பெறுகிறது. இந்த விசத்திற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியினை இத்தவளைகள் கொண்டுள்ளதோடு, இவ்விசத்தினை தோலின் மூலம் வெளியேற்றுகிறது. இச்செயல் தம்மை வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாக்கச் செய்கின்றது. இந்த விசம் மிகவும் சக்திவாய்ந்தது. தென் அமெரிக்க அமேசான் மழைக்காடுகளின் பூர்வீக மக்கள் தங்கள் இரைகளைக் கொல்ல இத்தவளைகளின் நச்சுகளை தங்கள் ஆயுதங்களில் பயன்படுத்துகிறார்கள். இதனால் இத் தவளைகளை அவர்கள் "விச டார்ட் தவளை" என்ற புனைபெயரில் அழைக்கின்றனர். சிலர் தேரைகளின் பஃபோடாக்சின்களை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. பொதுவாகத் தேரைகளின் அளவு மற்றும் நச்சுத்தன்மை காரணமாக, நன்கு வளர்ந்த, ஆரோக்கியமான மனிதர்களுக்கு ஆபத்தாக இருக்காது. ஆனால் அதிகப்படியான நச்சு உறிஞ்சப்பட்டாலோ, அல்லது நச்சினை எடுத்துக்கொண்டவர் இளம் வயதுடையவராகவோ அல்லது நோய்வாய்ப்பட்டவராகவோ இருந்தால், தவளையின் விசம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு சில இனங்களில் காணப்படும் நச்சு மிகுந்த ஆபத்தினை, உயிரினை ஒரு சில நிமிடங்களில் போக்ககும் தன்மையுடையதாக உள்ளது. தேரைகள் நக்குவதால் உயிரியல் ரீதியாக எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.

நீர் நில நச்சுயிரிகள்

தொகு
  • தவளைகள் மற்றும் தேரைகள்
     
    கரடுமுரடான தோல் நியூட் என்பது மூன்று வகையான விஷ சலாமண்டர்களில் ஒன்றாகும்.
    • அமெரிக்க தேரை
    • ஆசிய தேரை
       
      ஆஸ்திரேலியாவில் கரும்பு தேரைகள் ஒரு பெரிய பிரச்சினையாகும், ஏனென்றால் இந்த தேரையின் நச்சுத் தோலைப் பற்றி பூர்வீக வேட்டையாடுபவர்களுக்குத் தெரியாது, அவர்கள் இத்தேரையினை உண்ணும் போது விரைவில் இறந்துவிடுவார்கள்.
    • கரும்பு தேரை
    • கொலராடோ நதி தேரை
    • பொதுவான தேரை
    • கோரோபோரி தவளை
    • ஐரோப்பிய பச்சை தேரை
    • ஃபோலரின் தேரை
    • மாண்டெல்லா
    • பனமேனிய தங்க தவளை
    • விஷம் டார்ட் தவளை
  • சாலமண்டர்கள்

மேலும் காண்க

தொகு
  • மனோ தேரை
  • விச மீன்
  • விச விலங்குகளின் பட்டியல்
  • நச்சு பறவைகள்
  • விச மீன்
  • விச பாலூட்டிகள்
  • விச பாம்புகள்
  • விச விலங்குகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Venomous Amphibians (Page 1) - Reptiles (Including Dinosaurs) and Amphibians - Ask a Biologist Q&A". Askabiologist.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2010-07-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Robert T. Nowak; Edmund D. Brodie Jr. (1978). "Rib Penetration and Associated Antipredator Adaptations in the Salamander Pleurodeles waltl (Salamandridae)". Copeia 1978 (3): 424–429. doi:10.2307/1443606. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_நில_நச்சுயிரிகள்&oldid=3667642" இலிருந்து மீள்விக்கப்பட்டது