நீலவானில் ஒரு வெள்ளை சூரியன்

நீலவானில் ஒரு வெள்ளை சூரியன் (Blue Sky with a white Sun, சீனம்: 青天白日旗; பின்யின்: Qīng tīan bái rì qí) என்பது தைவான் நாட்டினுடைய குவோமின்டாங் கட்சியின் கொடி மற்றும் சின்னமாக விளங்குகிறது. இக்கொடியானது சீனக்குடியரசின் ஒரு சிறு நிலப்பகுதிக்கு கொடியாகவும், சீனநாட்டின் தேசிய சின்னமாகவும், கப்பற்படையின் கொடியாகவும் திகழ்கிறது.


நீலவானில் ஒரு வெள்ளை சூரியன்
Blue Sky with a White Sun Flag
பிற பெயர்கள் "நீலவானில் ஒரு வெள்ளை சூரியன் " கொடி (青天白日旗)
குவோமின்டாங் (KMT) கட்சிக் கொடி மற்றும் சீன மக்கள் குடியரசு கப்பற்படையின் கொடி.
அளவு 2:3
ஏற்கப்பட்டது 1893
வடிவம் நீலப் பின்னணியில் வெள்ளை சூரியன் பனிரெண்டு கதிர்களுடன்.
National Emblem of the Republic of China
விவரங்கள்
பயன்படுத்துவோர் சீனக் குடியரசு
உள்வாங்கப்பட்டதுதிசம்பர் 17, 1928
விருதுமுகம்நீலவானில் ஒரு வெள்ளை சூரியன்
Party Emblem of the Kuomintang
விவரங்கள்
பயன்படுத்துவோர்குவோமின்டாங்
விருதுமுகம்நீலவானில் ஒரு வெள்ளை சூரியன் விளிம்பை நோக்கிய கதிர்களுடன்

நீல வானில் ஒரு வெள்ளை சூரியன் என்ற குறியீட்டில் சூரியனைச் சுற்றியுள்ள 12 கதிர்கள், 12 மாதங்களையும் பாரம்பரிய சீனாவின் பன்னிரண்டு மணி நேரத்தையும் (時辰 சிச்சென்) குறிக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நவீன நேரமான இரண்டு மணிகளையும் மற்றும் முன்னேற்றத்திற்கான சக்தியையும் அடையாளப் படுத்துகின்றன.

கொடியின் வரலாறு தொகு

நீல வானில் ஒரு வெள்ளை சூரியன் என்ற இக் கொடியானது, குடியரசுப் புரட்சியின் தியாகியான லு அவுடாங் என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆங்காங்கில் 1895 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல் நடைபெற்ற சிங் அரச மரபுக்கு எதிரான சீனாவைப் புதுப்பிக்கும் சமூகம் என்ற புரட்சிப்படை அமைப்பின் துவக்க விழாவில் கொடியை இவர் வெளியிட்டார்.

சீனக் குடியரசின் அறிவிப்புக்குக் காரணமான 1911 ஆம் ஆண்டு வூசாங் கிளர்ச்சியின் போது, பல்வேறு புரட்சிப் படைகள் அவர்களுக்கென்று தனித்தனியாக வெவ்வேறு கொடிகளை வைத்திருந்தனர். லு அவுடாங்கின் நீல வானில் ஒரு வெள்ளை சூரியன் கொடியை குவாங்டாங், குவாங்சிகி, யுன்னான் மற்றும் குழியொவ் மாகாணங்கள் பயன்படுத்தின. அதே வேளையில் 18 நட்சத்திரக் கொடி, ஐந்து வண்ணக் கொடி முதலியன மற்றெங்கும் பயன்படுத்தப்பட்டது.

சனவரி 1, 1912 அன்று சீன குடியரசின் அரசாங்கம், அமைக்கப்பட்ட போது, "ஐந்து வண்ணக் கொடி” தேசிய கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால், சன் யாட்-சென் அக்கொடியின் வடிவமைப்பை பொருத்தமானதாகக் கருதவில்லை. பேரரசுகள் காலத்திய அடுக்கதிகாரத்தை கொடியில் காணப்பட்ட கிடைமட்ட வரிசை மறைமுகமாக குறிப்பிடுவது போல் இருந்தது என்பதுதான் அதற்கான காரணமாகும். இதனால் அவர் 1917 இல் குவாங்சோவில் அரசமைத்த போது நீல வானில் ஒரு வெள்ளை சூரியன் கொடியை கட்சிக் கொடியாகவும், நீல வானம், வெள்ளை சூரியன், முழுக்க சிவந்த பூமி (青天白日滿地紅) கொடியை நாட்டின் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். பின்னர் இதுவே கடற்படையின் கொடியுமாக ஏற்கப்பட்டது. 1928 ஆம் ஆண்டில் அரசு முறைப்படி நீல வானில் ஒரு வெள்ளை சூரியன் கொடி கடற்படைக் கொடியாக அறிவிக்கப்பட்டது.

நீல வானம், வெள்ளை சூரியன், முழுக்க சிவந்த பூமி, கொடி சீனக்குடியரசின் (தைவான்) கொடியாக இன்றும் போற்றப்படுகிறது.

தேசிய சின்னத்தின் வரலாறு தொகு

சீனக் குடியரசின் தேசிய சின்னம் நீலவானில் ஒரு வெள்ளை சூரியன் கொடியில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இதன் அமைப்பை 1924 ஆம் ஆண்டு வாம்போவா இராணுவ கழகத்தில் இகி யின்சின் வடிவமைத்தார். பின்னர் இது சட்டப்பூர்வமாக தேசியக்கொடி என்றும் சீனக்குடியரசின் தேசியச் சின்னம் என்றும் 1928 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

தேசிய சின்னத்தில் சூரியக்கதிர்களுக்கும் விளிம்பிற்கும் இடையில் சிறிது இடைவெளி காணப்படும். இவ்விடைவெளி வானத்தின் பரந்து விரிந்த எல்லையைக் குறிப்பதாக கருதப்பட்டது. அதேசமயம் குமிண்டாங் சின்னத்தில் கதிர்கள் இடைவெளி ஏதுமின்றி விளிம்பைத் தொட்டவண்ணம் இருக்கும். இது புரட்சியின் சக்தியானது சூரியனின் சக்திக்கு நிகரானது என்பதைக் குறிப்பதாகவும் கருதப்பட்டது.

1913 முதல் 1928 வரை சீனக்குடியரசின் தேசிய சின்னமாக பன்னிரண்டு குறியீடுகளடங்கிய தேசிய சின்னமாக (十二章國徽) விளங்கியது. மரபார்ந்த இக்குறியீடுகள் பண்டைய சீனப்பேரரசர்களின் ஆடைகளின் அடிப்படையில் அமைந்திருந்தன. இவ்வடிமைப்பு லூசன், சியான் டாவுசன் மற்றும் சூ சோவுசாங் ஆகியோரால் 1912 ஆம் ஆண்டு ஆகத்து 28 இல் வடிவமைக்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேசிய சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1915 முதல் 1916 ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த அரசரும் இதேசின்னத்தையே ஏற்று ஆட்சிபுரிந்தார். வடக்கில் இருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பிற்குப் பின்னர் இச்சின்னம் மாற்றப்பட்டு 1928 ஆம் ஆண்டில் நீல வானில் ஒரு வெள்ளை சூரியன் சின்னம் தேசிய சின்னமாக ஏற்கப்பட்டது.

தாங்குவா காலச்சூழல் தொகு

குடியரசின் தொடக்க ஆண்டுகளில், கோமின்டாங் கட்சி தன்னுடைய அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி சீனக் குடியரசு கொடியின் முக்கிய அம்சங்களை தானும் பகிர்ந்து கொண்டது. ஓரு பொதுவான படக்காட்சி , கோமின்டாங் கொடியின் இடப்புறமும் சீனக்குடியரசுக் கொடியின் வலது புறமும் ஒதுங்கியிருந்தன. இரண்டிலுமே ஒரு கோணத்தில் தேசத் தந்தை சன் யாட் சென்னின் உருவப்படம் முகப்பிடப்பட்டிருந்தது. சீனக் குடியரசின் அரசியலமைப்பு பிரகடனம் செய்யப்பட்ட பிறகு கட்சிக் கொடியில் அத்தகைய காட்சிகள் அகற்றப்பட்டு தேசியக் கொடி முன்னிலைப்படுத்தப்பட்டது. சீனக்குடியரசின் அரசங்கம் தைவா வந்த பிறகு அதிலும் குறிப்பாக இராணுவச் சட்டத்தின் விளைவாக கோமின்டாங் கட்சி தன் கொடியையும் அதன் அம்சங்கள் சிலவற்றையும் இழந்தது. ஆனாலும் கோமின்டாங் கட்சி அலுவலகங்களிலும் அரசியல் பேரணிகளிலும் கூட்டங்களிலும் நீலக் கொடியை காணமுடிந்தது.

மேற்கோள்கள் தொகு


புற இணைப்புகள் தொகு