நீள்மூஞ்சி வண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீள்மூஞ்சி வண்டு | |
---|---|
![]() | |
Lixus angustatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | கணுக்காலிகள் |
வகுப்பு: | பூச்சிகள் |
வரிசை: | Coleoptera |
துணைவரிசை: | Polyphaga |
உள்வரிசை: | Cucujiformia |
பெருங்குடும்பம்: | Curculionoidea Latreille, 1802 |
Families | |
Anthribidae — fungus weevils |
நீள்மூஞ்சி வண்டு (தமிழகத்தில் கூன்வண்டு என்று அழைக்கப்படுகிறது) என்பது நீளமான முகத்தைக் கொண்ட கேர்குயிலியொனொய்டியே சிறப்புக் குடும்பத்தைச் சேர்ந்த வண்டினம் ஆகும். இதில் ஏறக்குறைய 60,000 வகைகள் காணப்படுகின்றன.
இவை வண்டினத்தின் உடல் கீழ்ப்புறமாக வளைந்திருக்கும். நீளமான முன்னுறுப்பு மூலம் தன் சுற்றுப்புறத்தை உணரக்கூடியன. சில கூன்வண்டு வகைகள் பறக்கும் திறன் பெற்றவை. இந்தியாவில் இவை மிகவும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவுவரை காணப்படும் ஒரு தாவர உண்ணி ஆகும். இவை புல்தரை, வயல்வெளி, புதர்கள் போன்றவற்றில் காணப்படும். மாம்பழம், அரிசியின் உள்ளே இருந்தெல்லாம் புறப்பட்டு வருபவை இந்த கூன்வண்டுகள்தான். பொதுவாக இந்த வண்டினம் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறன்றன. நெல், கோதுமை, சோளம், பருத்தி போன்ற பயிர்களை இவை தாக்கக் கூடும். அதேநேரம் சில கூன்வண்டுகள் அயல் தாவரங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ ஆதி வள்ளியப்பன் (2018 மார்ச் 31). "ஒல்லித் தலை கூன்வண்டு". கட்டுரை. தி இந்து தமிழ். 3 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)