நீள் தீவு
நீள் தீவு அல்லது லாங் தீவு (Long Island) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு மாநிலமான நியூயார்க் மாநிலத்திலுள்ள ஓர் தீவு ஆகும். நியூயார்க் துறைமுகத்திலிருந்து அத்திலாந்திக்குப் பெருங்கடலில் வடகிழக்காக நீண்டுள்ள இத்தீவில் நான்கு கவுன்ட்டிகள் அமைந்துள்ளன; இவை நியூயார்க் நகரத்தின் இரண்டு கவுன்ட்டிகளான கிங்சு,குயின்சும் (நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்களான புரூக்ளினும் குயின்சும்), பெரும்பாலும் புறநகர் பகுதிகளான நாசோ, சஃபோக் கவுன்ட்டிகளும் ஆகும். இந்த நான்கு கவுன்ட்டிகளுமே நியூயார்க் பெருநகரப் பகுதியின் அங்கங்களாகும்.[2] பொதுவாக "லாங் ஐலாண்டு" என்று குறிப்பிடும்போது நாசோ, சஃபோக் கவுன்ட்டிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன. நீள் தீவின் வடக்கே நீள்தீவு கடற்குடா (லாங் ஐலாண்ட் சௌண்ட்) உள்ளது. இது கனெடிகட், றோட் தீவு மாநிலங்களிலிருந்து நீள்தீவை பிரிக்கிறது.
உள்ளூர் பெயர்: பௌமனோக்[1] | |
---|---|
நீள்தீவு மற்றும் நியூயார்க் நகரத்தின் செய்மதி ஒளிப்படம் | |
புவியியல் | |
அமைவிடம் | அத்திலாந்திக்கு பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 40°48′N 73°18′W / 40.8°N 73.3°W |
பரப்பளவு | 1,401 sq mi (3,630 km2) |
நீளம் | 118 mi (190 km) |
அகலம் | 23 mi (37 km) |
உயர்ந்த புள்ளி | ஜேய்ன்சு குன்று 401 ft (122 m) |
நிர்வாகம் | |
ஐக்கிய அமெரிக்கா | |
மாநிலம் | நியூ யோர்க் மாநிலம் |
மக்கள் | |
மக்கள்தொகை | 7,686,912 (2012) |
அடர்த்தி | 5,402.1 /sq mi (2,085.76 /km2) |
இனக்குழுக்கள் | 54.7% வெள்ளையர், 20.4% கறுப்பர், 0.49% பழங்குடி அமெரிக்கர், 12.3% ஆசியர், 0.05% பசுபிக் தீவினர், 8.8% பிற இனத்தவர், 3.2% கலப்பினத்தவர்; 20.5% இசுப்பானிய அல்லது இலத்தீனிய கலப்பினர் |
மேற்சான்றுகள்
தொகு- ↑ Richmond Hill Historic Society Tributary tribes
- ↑ About Long Island, LongIsland.com