நுகுகி வா தியங்கோ

கென்ய எழுத்தாளர்

நுகுகி வா தியங்கோ (Ngũgĩ wa Thiong'o[1], பிறப்பு ஜேம்ஸ் நுகி: சனவரி 5, 1938)[2] என்பவர் ஒரு கென்ய எழுத்தாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் கிழக்கு ஆப்பிரிக்காவின் முன்னணி புதின ஆசிரியர் என்று குறிப்பிடப்படுகிறார்.[3] இவர் முதலில் ஆங்கிலத்திலேயே எழுதத் தொடங்கினார். பின்னர் தன் தாய்மோழியான கிகுயுவிலேயே முதன்மையாக எழுதிவருகிறார். இவரது படைப்புகளில் இலக்கியம் மற்றும் சமூக விமர்சனம் முதல் குழந்தைகள் இலக்கியம் வரையிலாக புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை அடங்கும். இவர் கிகுயு மொழி இதழான முதிரியின் நிறுவனரும் ஆசிரியரும் ஆவார். இவரது சிறுகதை தி அப்ரைட் ரெவல்யூஷன்: ஆர் வை ஹுமன்ஸ் வாக் அப்ரைட் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[4] languages.[5] ஜேம்ஸ் நுகுகி என்ற தம்முடைய பெயரை அது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் எனக்கருதி தமது கிகுயு மொழி மரபிற்கேற்ப தியெங்கோவின் மகன் நுகுகி எனப் பொருள்பட நுகுகி வா தியங்கோ என மாற்றிக் கொண்டார்.

நுகுகி வா தியங்கோ
பிறப்புயேம்சு நுகுகி
5 சனவரி 1938 (1938-01-05) (அகவை 87)
கமிரீத்து, கென்யா
தொழில்எழுத்தாளர்
மொழிஆங்கிலம், கிக்கியு

இவரது நூல்கள்

தொகு
  • ஒரு கோதுமை மணி (புதினம்)
  • அழாதே குழந்தாய் (புதினம்)
  • இரத்த இதழ்கள்(புதினம்)
  • சிலுவையில் சாத்தான் (புதினம்)
  • தடுப்புக்காவல்
  • இடையில் ஓர் ஆறு (புதினம்)
  • இரகசிய வாழ்க்கைகள் (கதைத் தொகுதி)

மேற்கோள்கள்

தொகு
  1. Archived at Ghostarchive and the Wayback Machine: "Ngũgĩ wa Thiong'o: 'Europe and the West must also be decolonised'". YouTube. 10 September 2019.
  2. "Ngũgĩ wa Thiong'o: A Profile of a Literary and Social Activist". ngugiwathiongo.com. Archived from the original on 29 March 2009. Retrieved 20 March 2009.
  3. "African literature; search for Ngugi wa Thiong'o". Encyclopedia Britannica. (2 December 2022). 
  4. Kilolo, Moses (2 June 2020). "The single most translated short story in the history of African writing: Ngũgĩ wa Thiong'o and the Jalada writers' collective". The Routledge Handbook of Translation and Activism (in ஆங்கிலம்). Routledge. doi:10.4324/9781315149660-21. ISBN 978-1-315-14966-0. S2CID 219925787. Retrieved 28 September 2021.
  5. "Jalada Translation Issue 01: Ngũgĩ wa Thiong'o". Jalada. 22 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகுகி_வா_தியங்கோ&oldid=4223325" இலிருந்து மீள்விக்கப்பட்டது