நுணாவில்

இலங்கை யாழ்பாண மாவட்டதிலுள்ள ஒரு ஊர்

நுணாவில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் கல்வயலும், கிழக்கு எல்லையில் சாவகச்சேரி நகரமும், தெற்கில் மறவன்புலவும், மேற்கில் கைதடியும் உள்ளன. இவ்வூர் நுணாவில் மேற்கு, நுணாவில் மத்தி, நுணாவில் கிழக்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதிக்கு இணையாகச் சென்ற தொடர்வண்டிப் பாதையும் இவ்வூரினூடாகச் சென்றது. கொல்லாங்கிராய் (கொல்லா புரி) நுணாவிற் குளம், மணங்குளாய், ஆனைக்கோட்டை, தாளையடி, கல்வயல், மணற்பிட்டி எனப் பல குறிச்சிகளைக் கொண்டு நுணாவில் விளங்குகிறது.

இங்கு பிறந்தவர்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுணாவில்&oldid=2774237" இருந்து மீள்விக்கப்பட்டது