மறவன்புலவு
மறவன்புலவு அல்லது மறவன்புலோ யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும்.[1] யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கில் உள்ள உப்பாறு கடலேரியின் கரையில் அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் நுணாவிலும், கிழக்கு எல்லையில் தனங்கிளப்பும், தெற்கில் கடலேரியும், மேற்கில் கோயிலாக்கண்டியும் உள்ளன.[2] இவ்வூருக்கு ஒரேயொரு கிராம அலுவலர் பிரிவு மட்டுமே உள்ளது.
நாவற்குழியில் இருந்து பூநகரி நோக்கிச் செல்லும் வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. குடாநாட்டினூடாகச் சென்ற தொடர்வண்டிப் பாதையும் இவ்வூரின் வடக்கு எல்லையை அண்டிச் சென்றது.
இவ்வூர் கடலேரியை அண்டி அமைந்துள்ளதால், மீன்பிடித்தொழிலும் இவ்வூரில் ஒரு முக்கியமான தொழிலாக உள்ளது. 2013 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இவ்வூரில் 40 மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றன.[3]
இங்கு பிறந்தவர்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Uyarap-pulam, Koḻuntup-pulavu, Kēppā-pilavu, Koṟ-pulō". TamilNet. May 4, 2013. https://tamilnet.com/art.html?catid=98&artid=36278.
- ↑ Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.
- ↑ Statistical Information of the Northern Province-2014, பக். 82.
உசாத்துணைகள்
தொகு- Statistical Information of the Northern Province-2014, Northern Provincial Council, Sri Lanka.
- Statistical Information 2010, Northern Provincial Council, Sri Lanka.