நுண்ணுயிர்கட்டு-அணுகத்தக்க கார்போவைதரேட்டுகள்

நுண்ணுயிர்கட்டு-அணுகத்தக்க கார்போவைதரேட்டுகள் (Microbiota-accessible carbohydrates, MACs) எனப்படுபவை ஓம்புயிரிகளின் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சமிபாட்டை எதிர்க்கக் கூடிய கார்போவைதரேட்டுகள் ஆகும். ஆனால் இவை குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வளர உதவி செய்யும் உணவுத் துகள்களாகும். மேலும் இவை வளர் சிதை மாற்றம் அடைந்து பயன் தரக்கூடிய சேர்மங்களாகிய சிறு வலை கொழுப்பு அமிலங்கள் உருவாக உதவி புரிகிறது.[1] நுண்ணுயிர்கட்டு-அணுகத்தக்க எனும் பதம் இந்த கார்போவைதரேட்டுகளின் வளர்சிதை உருமாற்ற பணியை ஆராய்வதற்கான ஒரு கருத்து உருவை கொடுத்துள்ளது. இங்கு உருமாற்ற பணி என்பது ஒரு குறிப்பிட்ட உணவு அல்லது கார்போவைதரேட்டு ஓம்புயிரியின் நுண்ணுயிர்த் தொகுதிக்கு பணி செய்ய கொடுக்கும் பங்களிப்பாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு