நுண் விலங்குகள்
நுண்-விலங்குகள் (Micro-animals) என்பவை மிகவும் சிறிய சாதாரண கண்களுக்குத் தெரியாத நுண்நோக்கிகளால் மட்டுமே பார்க்க இயல்கின்ற உயிரினங்களாகும். பெரும்பாலும் இவ்வகை நுண்ணுயிர்கள் பலசெல் உயிரினங்களாகக் காணப்பட்டாலும் அவை முதுகெலும்பிகளாக இல்லை[1] . நுண்நோக்கியில் மட்டுமே காணவியல்கின்ற கணுக்காலிகள், அகத்தூசிக் கிருமிகள், அக்காரினாக் கிருமிகள் மற்றும் ஓடுடலிகளான கடல் முகட்டுப் பூச்சிகள் மற்றும் கிளாடோசிராக்கள் முதலியனவும் நுண்-விலங்கு வகையில் உள்ளடங்கும். நன்னீர்வாழ் விலங்குகளான வடிகட்டி உண்ணும் வட்டுயிர்களும் வேறுவகையான நுண்நோக்கி விலங்குகள் குழுவாகக் கருதப்படுகின்றன. சிலவகை உருளைப்புழுக்கள், சமீபத்தில் கண்டறியப்பட்ட வளிவேண்டா உயிரினங்கள் உட்பட்ட உலோர்சிபெராக்கள் ஆகியனவும் நுண்ணூயிர்களேயாகும். வளிவேண்டா உயினங்கள் உயிர் வளியற்ற மண்டலங்களில் வாழும் தன்மையுடையவையாகும்[2][3] . சிலவகை நீர்க்கரடிகள், நீர்வாழ் நுண்விலங்குகள் போன்ற உயிரினங்களால், வாழ்வதற்கு பொருத்தமில்லாத வெற்றிடங்கள், விண்வெளி மற்றும் புற ஊதா கதிர்வீச்சுக்கு உட்படும் வானுயிரியல் சோதனை பிரதேசங்கள் ஆகியவற்றிலும் எதிர்த்து வாழமுடிகின்றது[4].
மெற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
- ↑ "Animals thrive without oxygen at sea bottom". nature.com.
- ↑ "Briny deep basin may be home to animals thriving without oxygen". Science News.
- ↑ Simon, Matt (March 21, 2014). "Absurd Creature of the Week: The Incredible Critter That's Tough Enough to Survive in Space". Wired. பார்க்கப்பட்ட நாள் 2014-03-21.