நூலின் குற்றங்கள்

நூலின் குற்றங்கள் எனப் பிற்கால நன்னூல் குறிப்பிடுவதை முற்காலத் தொல்காப்பியம் நூலின் சிதைவு எனக் காட்டுகிறது.[1]

நூல் கருத்துக்களைக் கூறும் பாங்கில் எத்தகைய குற்றங்கள் வரக்கூடாது என நன்னூல் தொகுத்துக் காட்டுகிறது. அவை 10 என அது வரையறை செய்கிறது. இது அந்த நூலாசிரியர் கணக்கிட்டுப் பார்க்கும் சில உண்மைகள்.[2][3]

 1. குன்றக் கூறல்
 2. மிகைபடக் கூறல்
 3. கூறியது கூறல்
 4. மாறுகொளக் கூறல்
 5. வழூஉச்சொல் புணர்த்தல்
 6. மயங்க வைத்தல்
 7. வெற்றெனத் தொடுத்தல்
 8. மற்றொன்று விரித்தல்
 9. சென்று தேய்ந்து இறுதல்
 10. நின்று பயனின்மை

காண்க

அடிக்குறிப்புதொகு

 1. சிதைவு எனப்படுபவை வசை அற நாடின்,
  கூறியது கூறல், மாறு கொளக் கூறல்,
  குன்றக் கூறல், மிகை படக் கூறல்,
  பொருள் இல கூறல், மயங்கக் கூறல்,
  கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்,
  பழித்த மொழியான் இழுக்கம் கூறல்,
  தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்,
  என்ன வகையினும் மனம் கோள் இன்மை,
  அன்ன பிறவும் அவற்று விரி ஆகும். (தொல்காப்பியம் 3-654, மரபியல்)

 2. நன்னூல் 12
 3. எண்ணிக்கை வரையறை அவரவர் அறிவோட்டத்தைப் பொருத்தது
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலின்_குற்றங்கள்&oldid=2745866" இருந்து மீள்விக்கப்பட்டது