நூல் விரும்பி
நூல் விரும்பி (Bibliophile) என அழைக்கப்படுபவர் நூல்களில் அதிக ஆர்வம், ஈடுபாடு உள்ளவர் ஆவார். இப்படியானவர்களை புத்தகப் புழுக்கள் அல்லது புத்தகப் பூச்சிகள் என்று பேச்சு வழக்கில் பொதுவாக குறிப்பிடுவர். பொதுவாக இவர்கள் வாசிப்பை விரும்புபவர்களாக இருப்பதோடு பல வகையான நூல்களையும் ஆர்வத்துடன் வாசிப்பவர்களாக இருப்பர்.[1] இவர்களில் சிலர் குறிப்பிட்ட விடயத்தில் ஆர்வம் கொண்டு அது தொடர்பான நூல்களை வாசிப்பவர்களாகவும் இருப்பர். நூல் விரும்பிகள் அனைவரும் நூல்களை சேகரிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிலர் தாமே பல்வேறுபட்ட நூல்களை வாங்கி வீட்டில் சிறிய நூலகம் போல் அமைத்து நூல் சேகரிப்பு செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Carter, John (1952). ABC for Book Collectors. Archived from the original on 2017-11-21. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.