நெடுங்கல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
நெடுங்கல் (Nedungal) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊருக்கு அருகில் நெடுங்கல் அணை உள்ளது.
நெடுங்கல் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635112 |
இந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு குன்றை மையமாக கொண்டு ஒரு நெடிய கற்பாறை நீண்டு உயர்ந்து உள்ளது. இந்த நெடிய பாறையினால் இந்த ஊருக்கு நெடுங்கல் என்ற பெயர் வந்தது.
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது காவேரிப்பட்டணத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு