நெப்ரா வான் தட்டு

நெப்ரா வான் தட்டு என்பது சுமார் 30 சென்டி மீட்டர் (11+3⁄4 அங்குலம்) விட்டம் மற்றும் 2.2 கிலோ கிராம் (4.9 எல்பி) எடை கொண்ட ஒரு வெண்கல வட்டு ஆகும்.[1] நீலம்-பச்சை நிறக் களிம்பு ஏறிய இத்தட்டில், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட சூரியன் அல்லது முழுநிலவு, ஒரு சந்திர பிறை, நட்சத்திரங்கள் மற்றும் 7 நட்சத்திரக் கூட்டம் மற்றும் கதிர்திருப்பதைக் குறிக்கும் இரு புறங்களிலும் லாட வடிவங்களும் கொண்டது.[2]இத்தட்டின் பின்புறத்தில் வாட்கள், கத்திகள், கோடாரிகள் மற்றும் வளையல்களின் உருவங்கள் உள்ளது.

நெப்ரா வான் தட்டு
வெண்கல காலத்திய நெப்ரா வான் தட்டில் காணப்படும் வாட்கள்
வான் தட்டில் காணப்படும் கத்திகள், கோடாரிகள் மற்றும் வளையல்கள்

வெண்காலத்தைச் சேர்ந்த இந்த நெப்ரா வான் தட்டு கிமு 1600 - கிமு 1560 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. நெப்ரா வான் தட்டு தொல்பொருள் ஜெர்மனி நாட்டின் நெப்ரா எனும் தொல்லியல் களத்தில் 1999-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[3] நமது பூமி, சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களைக் கொண்ட பால்வெளி மண்டலத்தைக் காட்டும் நெப்ரா வான் தட்டு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதல் வானியல் தொல்பொருள் ஆகும்.

11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய நெப்ரா வான் தட்டு தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[4]

நெப்ரா வான் தட்டை விளக்கும் காணொலி

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

பன்னாட்டுத் தர தொடர் எண் 0072-940X

பன்னாட்டுத் தர தொடர் எண் 0170-2971

  • Ch. Sommerfeld : ...Sterne mal Sterne durch Sonne ist Mond - Bemerkungen über die Nebra-Scheibe, Praehistorische Zeitschrift, 87(1) 2012, S. 110–131.

பன்னாட்டுத் தர தொடர் எண் 1613-0804

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்ரா_வான்_தட்டு&oldid=3688746" இலிருந்து மீள்விக்கப்பட்டது