நெம்யங்கு மலை


நெம்யங்கு மலை (Nemjung) என்பது நேபாள நாட்டின் இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியாகும். நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் இருந்து வடமேற்காக சுமார் 150 கிலோமீட்டர் அல்லது 93 மைல்கள் தொலைவில் நெம்யங்கு மலை அமைந்துள்ளது. மேலும் இம்மலை ஏழாயிரமடி சிகரங்கள் வகைப்பாட்டில் அடங்கும் மலையான மனசுலு மலைக்கு வடமேற்கில் 25 கிலோமிட்டர் தொலைவில் இருக்கிறது. இம்மலையின் அதிகபட்ச உயரம் 7140 மீட்டர்கள் அல்லது 23,425 அடிகளாகும்.

நெம்யங்கு
Nemjung
நெம்யங்கு Nemjung is located in நேபாளம்
நெம்யங்கு Nemjung
நெம்யங்கு
Nemjung
நேபாளத்தில் இருப்பிடம்
உயர்ந்த புள்ளி
உயரம்7,140 m (23,430 அடி)[1]
புடைப்பு1,920 m (6,300 அடி)[1]
பட்டியல்கள்அல்ட்ரா
புவியியல்
அமைவிடம்மனாங்கு மாவட்டம்,
காண்டகி மண்டலம்,
வடக்கு மத்திய நேபாளம்
பகுதிNP
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்1983 இல் ஒரு சப்பானியக் குழு
எளிய வழிபாறை/பனி/பனிக்கட்டி ஏற்றம்

1983 ஆம் ஆண்டு சப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு மலையேற்றக்குழு நெம்யங்கு மலையில் ஏறி வெற்றிகண்டது. அதன்பின்னர் 1994 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மலையேற்றக் குழுவினர் மற்றும் 2009 ஆம் ஆண்டில் பிரான்சு[2] நாட்டைச் சேர்ந்த குழுவினர்கள் பலமுயற்சிகள் மேற்கொண்டனர். 2009, அக்டோபர் 30 இல் ஒசாமுதனாபே தலைமையிலான சப்பானியக்குழு அதுவரையிலும் வெற்றி கொள்ள முடியாமலிருந்த மேற்கு முகடு மற்றும் மேற்கு முகப்பகுதியின் வழியாக நெம்யங்கு மலையின் உச்சியை அடைந்து வெற்றி கண்டனர்[3][4][5].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "High Asia II: Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.
  2. "French Climb South Spur of Nemjung". Archived from the original on 2012-06-14. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
  3. "Nemjung Climbed from the West". பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
  4. "Japanese Climb West Face of Nemjung". Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
  5. "2009: Nemjung, by D. MacDonald". Archived from the original on 2012-08-17. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெம்யங்கு_மலை&oldid=3791669" இலிருந்து மீள்விக்கப்பட்டது