நெருங்கி வா முத்தமிடாதே

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(நெருங்கி வா முத்தமிடாதே (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெருங்கி வா முத்தமிடாதே (Nerungi Vaa Muthamidathe) லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பியா பாஜ்பாய், ஷபீர், ஸ்ருதி ஹரிஹரன், ஏ. எல். அழகப்பன், ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ. வினோத் பாரதி ஆவார். ஏ. வி. அனூப் தயாரிப்பில், மேட்லி ப்ளூஸ் இசை அமைப்பில், 31 அக்டோபர் 2014 ஆம் தேதி வெளியானது.[1]

நடிகர்கள்

தொகு
  • பியா - மாயா
  • ஷபீர் - சந்துரு
  • சுருதி ஹரிஹரன் - மஹா
  • ஏ. எல். அழகப்பன் - காளீஸ்வரன்
  • விஜி சந்திரசேகர் - சீதா
  • ஒய். ஜி. மகேந்திரன் - சுப்பிரமணியன்
  • தம்பி ராமையா - ராஜ கோபாலன்
  • பாலா சரவணன் - சொக்கு
  • நடராசன் - மாயாவின் நண்பன்
  • அம்பிகா
  • இலட்சுமி ராமகிருஷ்ணன்
  • ஏ. வி. அனூப்
  • சியாம் சாகர்
  • கவுதம் குரூப்
  • பிரதிக்
  • ராமகிருஷ்ணன்

தயாரிப்பு

தொகு

இலட்சுமி ராமகிருஷ்ணன், தனது இரண்டாவது திரைப்படம் திருச்சி-காரைக்கால் பயணம் தொடர்பாகவும், வாகன எரிபொருள் நெருக்கடியை சார்ந்தும் இருக்கும் என்று அறிவித்தார்.[2] கதாநாயகியாக பியா பாஜ்பாயும், தமிழ் திரைப்படங்களில் முதல் முறையாக அறிமுகமாகும் ஸ்ருதி ஹரிஹரனும் தேர்வு செய்யப்பட்டனர்.[3] தனது கணவர் ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பளார் ஏ. வி. அனூப் ஆகியோர் படத்தில் சிறுவேடத்தில் நடித்திருப்பதாகவும், தனது இளைய மகள் ஷ்ரேயா இயக்கத்தில் உதவிய இருந்ததாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேலும் அறிவித்தார்.[4]

இந்தத் திரைப்படம் எழுபது நாட்களில் படமாக்கப்பட்டது. தனது முந்தைய படைப்பை (ஆரோகணம் 2012) காட்டிலும் , இப்படம் புத்துணர்வுடன் இருக்கும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.[5] இந்தப் படத்தின் பெயர், ஒரு லாரியின் பின் எழுதியிருந்த வாசகத்தைச் சார்ந்தது.[6]

ஒலிப்பதிவு

தொகு

பிரசாந்த் டெக்னா மற்றும் ஹரிஷ் வெங்கட் இருக்கும் மேட்லி ப்ளூஸ், படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தது.[7][8] ஆறு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 25 செப்டம்பர் 2014 ஆம் தேதி சூரியன் பண்பலை வானொலி ஸ்டுடியோவில் வெளியானது.[9] 10-க்கு 8 மதிப்பெண்கள் பெற்று, அறிமுக இசை அமைப்பாளர்கள் இருவரும் நல்ல இசையை தந்துள்ளதாக விமர்சனம் செய்யப்பட்டது.[10] படத்தின் அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுதியது நா. முத்துக்குமார் ஆவார்.

பாடல்களின் பட்டியல்
ட்ராக் பாடல் பாடியவர் நீளம்
1 கலிகாலம் ஷங்கர் மஹாதேவன் 4:35
2 ஹே சுற்றும் பூமி மிலி நாயர், ஹரிஷ் வெங்கட் 3:39
3 யார் நந்தினி ஸ்ரீகர் 4:42
4 யாரும் பாக்காம சின்மயி 3:42
5 கலிகாலம் (பின்னணி) - 4:32
6 யாரும் பாக்காம (பின்னணி) - 3:42

வரவேற்பு

தொகு

நல்ல கதையாக இருந்தாலும், நீண்ட திரைக்கதையை கொண்ட படம் என்றும்,[11] சாதி கலப்பு, காதல், தந்தை மகன் உறவு, தாய் மகள் உறவு, அரசியல் ஊழல் போன்ற பல பிரச்சனைகளை வெறும் 114 நிமிடங்களில் இயக்குனர் காட்சிப்படுத்த முயற்சி செய்துள்ளதாகவும்,[12] விமர்சனம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lakshmy grooms her actors to perform with subtlety: Piaa Bajpai". The Indian Express (in ஆங்கிலம்). 2014-06-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-12.
  2. "http://www.deccanchronicle.com". {{cite web}}: External link in |title= (help)
  3. "http://timesofindia.indiatimes.com/". {{cite web}}: External link in |title= (help)
  4. "http://indianexpress.com". {{cite web}}: External link in |title= (help)
  5. "http://www.thehindu.com". {{cite web}}: External link in |title= (help)
  6. "http://timesofindia.indiatimes.com". {{cite web}}: External link in |title= (help)
  7. "http://timesofindia.indiatimes.com". {{cite web}}: External link in |title= (help)
  8. "http://www.thehindu.com". {{cite web}}: External link in |title= (help)
  9. "http://timesofindia.indiatimes.com". {{cite web}}: External link in |title= (help)
  10. "http://www.musicaloud.com/". {{cite web}}: External link in |title= (help)
  11. "http://www.deccanchronicle.com". {{cite web}}: External link in |title= (help)
  12. "http://www.rediff.com". {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெருங்கி_வா_முத்தமிடாதே&oldid=4087693" இலிருந்து மீள்விக்கப்பட்டது