நெல்லூர் சோழர்கள்

11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆந்திராவின் சில பகுதிகளை ஆண்ட தெலுங்கு சோழர் மரபினர்

நெல்லூர் சோழர்கள் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆந்திராவின் சில பகுதிகளை ஆண்ட தெலுங்கு சோழர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவார். அவர்கள் காகத்தியர்கள் மற்றும் கல்யாணி சாளுக்கியர்களுக்கு தலைவர்களாக இருந்தனர. அவர்கள் நெல்லூர் பகுதியை ஆண்டனர்.

அவர்கள் தம்மை சோழ மன்னனான கரிகால் சோழனான வம்சாவளியினர் என்று கூறிக்கொண்டனர். அவர்கள் . நெல்லூர், கடப்பா சித்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கி தங்கள் ராஜ்யத்தை ஆட்சி செய்தனர், விக்ரமசிம்மபுரி (நவீன நெல்லூர் ) அவர்களின் தலைநகராக இருந்தது.

நெல்லூர் சோழ குலத்தின் முக்கியமான முதல் தலைவராக சோழ பிஜ்ஜானா என்பவர் இருந்தார். மேற்கு சாளுக்கியர்களின் முதலாம் சோமேஸ்வரரின் சிற்றரசன் என்ற நிலையில் அவர் சாளுக்கியர்கள் மற்றும் பிற்கால சோழர்களின் போர்களில் பங்கேற்றார். கல்யாணியின் சாளுக்கியர்களிடம் அவரது சந்ததியினரின் விசுவாசத்தையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, இரண்டாம் விக்ரமாதித்யர் அவர்களை பகநாட்டின் ஆட்சியாளர்களாக நியமித்தார்.

பின்னர் புகழ்பெற்ற மனுமசித்தியின் தந்தையான டிக்கா (1223–1248) தனது ராஜ்யத்தை தெற்கே காவேரி நதி வரை நீட்டித்தார். ஏற்கனவே முடங்கியிருந்த பிற்காலச் சோழர்களுக்கு அவர் பெயரளவு விசுவாசம் செலுத்த வேண்டியிருந்தது. ஹொய்சலா வீரநரசிம்மருடன் இணைந்து அனியங்க பீமா, இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் பாண்டியர்களின் தாக்குதல்களை முறியடித்து, பிற்கால சோழர்களின் ஆட்சியாளரான ராஜராஜ சோழர் III மீண்டும் அரியணையில் ஏற உதவினார்.

அதைத் தொடர்ந்து, ஹோய்சலரின் வீர நரசிம்மருக்குப் பின்வந்த சோமேஸ்வரா, பிற்கால சோழர் ஆட்சியாளரை தனது கைப்பாவையாக மாற்ற விரும்பினார். அதன் காரணமாக பாண்டியர்களுடன் கைகோர்த்து, ராஜேந்திரா III ஐத் தாக்கினார், திக்கா சோழரின் உதவிக்கு வந்தார். அவர் ஹோய்சாலர்கள் மற்றும் பாண்டியர்கள் படைகள் இரண்டையும் தோற்கடித்து அதன் மூலம் தொண்டைமண்டலத்தைப் பெற்றார். சோழஸ்தாபனாச்சார்யர் என்ற பட்டத்தையும் பெற்றார்.திக்காவின் மகனும் வாரிசான II மனுமசித்தி (1248–1263) ஆட்சியின் போது, நெல்லூர் சோழர்களின் அதிகாரம் குறைய ஆரம்பித்தது.

1260 ஆம் ஆண்டிற்குப் பின் மனுமசித்திக்கும் எர்ரகடப்பாடுவின் தலைவரான கட்டமராஜுக்கும் இடையே சிறிய பிரச்னை காரணமாக பகை ஏற்பட்டது. அது இரண்டு இளவரசர்கள் தங்கள் கால்நடைகளின் மந்தைகளுக்கு மேய்ச்சல் களமாக சில பரந்த புல்வெளிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகும். அது பலேரு ஆற்றின் பஞ்சலிங்கலாவில் போர் நடந்தது. கட்க திக்கானாவினால் வழிநடத்தப்பட்ட படைகள் வென்றபோதிலும் அவர் இறந்தார். இதன் பின்புலத்தில் உருவானதே போரும், கட்டமராஜு கதை என்ற கதையாகும். சிறிது காலத்திற்குப் பிறகு மனுமசித்தி இறந்தார்.

இரண்டாம் மனுமசித்தி இறந்தவுடன், நெல்லூர் இராச்சியம் தன் தனித்துவத்தை இழந்து, ககாதியர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் ஒரு போர்க்களத்தின் களமாக மாறியது.இரண்டாம் ககாதியா பிரதாபருத்ராவின் ஆட்சியில், நெல்லூர் பகுதி ககாதியா பேரரசின் ஒரு பகுதியாக மாறியதோடு, அதன் அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது.

நிர்வாகம்

தொகு

கலாச்சாரம்

தொகு

மதம்

தொகு

இந்த காலகட்டத்தில் இப்பகுதி சைவ மதம் மற்றும் வைணவம் ஆகிய இரண்டும் இப்பகுதியில் இருந்தன.

சமூகம்

தொகு

இலக்கியம்

தொகு

தெலுங்கு சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தெலுங்கு இலக்கியத்தில் நல்ல வளர்ச்சி இருந்தது. சிறந்த தெலுங்கின் மிகச்சிறந்த கவிஞர்களான டிக்கனா, கேதானா மற்றும் மரானா ஆகியோர் தங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளால் இலக்கியத்தை வளப்படுத்தியனர். திக்கனா சோமயாஜி நெல்லூரின் இரண்டாம் மனுமசித்தியின் அமைச்சராக இருந்தார். இந்த மாபெரும் கவிஞர் தெலுங்கில் இரண்டு முக்கியமான படைப்புகளை எழுதியிருந்தார். முதலாவது நிர்வாச்சநொத்தர ராமாயணம் . மிகுந்த சமஸ்கிருத பாணியில் எழுதப்பட்டிருந்தாலும் இது சிறந்த இலக்கிய குணங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும் ஆந்திர மகாபாரதம் தான் திக்கனாவுக்கு அழியாத புகழைக் கொண்டு வந்தது. இது மகாபாரதத்தின் கடைசி பதினைந்து தொகுதிகளின் மொழிபெயர்ப்பாக இருந்தது. அவரது முன்னோடியான நன்னயாவால் ஆரம்பித்துவைக்கப்பட்ட பணியை டிக்கானா காவியமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சியிலும் ஈடுபட்டார். அவரது பரந்த ஆன்மீக பார்வை, உயர்ந்த இலட்சியவாதம், உயர்ந்த கற்பனை மற்றும் அற்புதமான கற்பனைகள் அவரை கவி பிரம்மா (கவிஞர்களிடையே மிக உயர்ந்த படைப்பாளி) என்ற நிலைக்கு உயர்த்தியது.

அபினவ தண்டி என பாராட்டப்பட்ட, திக்கானாவின் காலத்தவரான கேதனா தன்னுடைய தசகுமாரசரிதமு என்ற படைப்பினை ரசனைக்குரியதாகவும் மற்றும் நல்ல பாணியிலும் எழுதியுள்ளார். அவர் , யாஜ்னாவாக்யா ஸ்மிருதி எனும் நூலுக்கான சமஸ்கிருத உரையான மிடாக்சகரி என்பதை தெலுங்கில் விஞ்யனேஸ்வரமு என்று மொழிபெயர்த்துள்ளார்.

கேதனாவின் மற்றொரு படைப்பு ஆந்திர பாஷாபூஷனமு என்ற நூலாகும். அது தெலுங்கில் மெட்ரிகல் இலக்கணம் குறித்தமைந்ததாகும். டிக்கானாவின் மற்றொரு சமகாலத்தவர் மரானா ஆவார். அவரும் பிந்தையவரின் சீடராக இருந்தார். அவர் மார்க்கண்டேய புராணத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தார். அவரது படைப்புகள், பின்னர் வந்த பல தெலுங்கு கவிஞர்களுக்கு ஒரு மூல நூலாக மாறியது, அதில் பல சுவாரஸ்யமான கதைகளிலிருந்து கருப்பொருள்களை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

கட்டிடக்கலை

தொகு

குறிப்புகள்

தொகு
  • துர்கா பிரசாத், கி.பி 1565 வரை ஆந்திராவின் வரலாறு, பி.ஜி. வெளியீட்டாளர்கள், குண்டூர் (1988)
  • தென்னிந்திய கல்வெட்டுகள் - http://www.whatisindia.com/inscription/
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லூர்_சோழர்கள்&oldid=2866542" இலிருந்து மீள்விக்கப்பட்டது