நேசனல் ஹெரால்டு மோசடி வழக்கு

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு (National Herald corruption case) 1936-இல் ஜவகர்லால் நேரு நிறுவிய நேசனல் ஹெரால்டு நிறுவனத்தின் பத்திரிக்கை வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் (Associated Journals) நிறுவனம் உள்ளது. மேற்படி இரண்டு நிறுவனங்களிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் ஓரா, ஆஸ்கார் பெர்னான்டஸ் போன்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நேசனல் ஹெரால்டு பத்திரிக்கையின் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சி கண்டதாலும், நட்டம் ஏற்பட்டதாலும், 2008-இல் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது.

நிதி இழப்பை சரிகட்டவும், தொடர்ந்து பத்திரிகை வெளியிடும் பொருட்டும் நேசனல் ஹெரால்டு நிறுவனத்திற்கு சோனியா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சி, ருபாய் 90.25 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது.

மேலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உறுப்பினர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம், அசோசியேட்டட் நிறுவனத்திற்கு ரூபாய் 50 இலட்சம் வழங்கியது. பின்னர் நேசனல் ஹ்ரால்டு நிறுவனம் காங்கிரசு கட்சியிடம் பெற்ற கடன் தொகை ரூபாய் 90.25 கோடியை, யங் இந்தியா நிறுவனம் செலுத்திவிடுவதாகக் கூறி, ரூபாய் 1,000 கோடி மதிப்புள்ள நேசனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். இதுவே சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கின் சாரம் ஆகும்.[1]

வழக்கு

தொகு

இதற்கு கைம்மாறாக நேசனல் ஹெரால்டு சொத்துக்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் எடுத்து கொண்டதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் சொத்துக்களை அபகரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். [2] சோனியா, ராகுல் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் ஓரா உள்ளிட்டோர் மீது சொத்துக்களை அபகரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தில்லி விசாரணை நீதிமன்றம், சோனியா, ராகுல் உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக அறிவிக்கை அனுப்பியது.[3][4]இவ்வழக்கில் 19 டிசம்பர் 2015 அன்று தில்லி பாட்டியாலா நீதிமன்றம் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்களுகு ஜாமீன் வழங்கியது.[5]

இவ்வழக்கை எதிர்த்து 2021-ஆம் ஆண்டில் சோனியா காந்தி குழுவினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இடைக்கால தடையை நீட்டிக்க மறுத்த அவர், சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.[6] 2021[7]இதனால், விசாரணை நீதிமன்றத்தில் சோனியா, ராகுல் இன்று நேரில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு