நேபாளத்தில் தற்கொலை
நேபாளத்தில் தற்கொலை (Suicide in Nepal) என்பது சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் முக்கிய நபர்களின் தற்கொலைகளால் முன்னிலைப் படுத்தப்பட்ட தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. 2015ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி உலகளவில் தற்கொலை விகிதத்தில் 126வது இடத்தில் நேபாளம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 6,840 தற்கொலைகள் அல்லது 100,000 பேருக்கு 8.2 தற்கொலைகள் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இதில் முக்கியமாக 15 வயது முதல் 49 வயதுடைய நேபாளப் பெண்களின் தற்கொலையானது தற்கொலை மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.[2] [3]
குறைந்த எண்ணிக்கையிலான பதிவுகள்
தொகுநேபாளத்தில் தற்கொலை விகிதம் 3.7/100,000 வரை குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமான பிரச்சினைகள், சமூக களங்கம் மற்றும் நடைமுறைச் சிக்கல்களால் உண்மையாக நிகழும் தற்கொலைகளின் குறைவாகப் பதிவிடப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.[4]
நேபாளத்தில் தற்கொலை சட்டவிரோதமானதாகவும், தற்கொலையில் முயல்பவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலை உள்ளது. பெண்களின் உரிமைகளுக்கான நேபாள அமைப்பான சமந்தாவின் இயக்குநரின் கூற்றுப்படி, "பெரும்பாலான குடும்பங்கள் தற்கொலை வழக்குகளில் புகாரளிக்க மாட்டார்கள் என்றும், ஏனெனில் அவர்கள் காவல்துறை வழக்குகளில் சிக்கிக்கொள்ளலாம் என்று பயப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கின்றனர்.[2] சட்டச் சிக்கலைத் தவிர்க்கும் முயற்சியில், தற்கொலை செய்துகொள்பவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காகச் செல்வதைக் கூடத் தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார். சட்டச் சிக்கலைத் தவிர்ப்பதற்காகத் தற்கொலையில் ஈடுபட்டு ஏற்படும் மரணங்கள் கூட பிற காரணங்களால் நிகழ்ந்ததாகத் தவறாகக் குறிப்பிடப்படுகின்றன.[4]
சமூக அவப்பெயர் மற்றும் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக குடும்பங்கள் தற்கொலையைப் புகாரினைப் பதிவு செய்யச் தவிர்க்கின்றனர்.[4] நேபாளத்தில் தற்கொலையைப் பற்றி விவாதிக்கும் ஏராளமான கட்டுரைகள் வெளியிடப்பட்டபோதிலும் தற்கொலையினால் ஏற்படும் பிரச்சனைகளை இக்கட்டுரைகள் விவாதிக்கத் தவறிவிடுகின்றன அல்லது தவிர்க்கப்படுகின்றன.[5] பெண்களைப் பொறுத்தவரை, குறிப்பாக குடும்பத்தில் இழிவான செயல்பாடுகள் காரணமாக நிகழும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் பற்றிய குறைவான பதிவுகள் "அமைதியின் கலாச்சாரம்" காரணமாக உள்ளன.[6]
இறுதியாக, தர்க்கரீதியான சிக்கல்கள் துல்லியமான அறிக்கையிடல் மற்றும் பதிவிற்கான அச்சுறுத்தலாக உள்ளது. நேபாள சுகாதாரத் துறை ஆதரவு திட்டத்தின்படி, "காவல்துறை மற்றும் மருத்துவமனைகளின் குறைவான பதிவேடு" மற்றும் "பதிவுகள்” தவறானவை மற்றும் தரமற்றவையாக" உள்ளன. சமூக மற்றும் சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டபோதும் தற்கொலை தொடர்பாகக் குறைந்த அளவுப் பதிவு தொடர்கின்றன.[3]
பாலின வேறுபாடுகள்
தொகு2009ஆம் ஆண்டில், நேபாள குடும்ப சுகாதார பிரிவின் தாய்வழி இறப்பு மற்றும் நோயுற்றல் ஆய்வு "அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பை" தந்தது. இனப்பெருக்க வயதுடைய (15-49) பெண்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாகத் தற்கொலை அமைந்தது. இந்த அறிக்கையின்படி, மனநலப் பிரச்சினைகள், உறவுகள், திருமணம் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் தற்கொலையின் முக்கிய காரணிகளாகக் கூறப்பட்டது. இனப்பெருக்க வயதுடைய பெண்களில் 21% பெண்கள் 18 அல்லது அதற்குக் குறைவானவர்கள் என்பதால், "இளைஞர்கள் ஒரு காரணி” என்பதை விசாரிக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.[7] ஆண்களின் தற்கொலை விகிதம் கிட்டத்தட்ட உலகளாவிய விகிதத்தினை விட, நேபாளத்திலும் அதிகமாக உள்ளது (ஆண்களுக்கு 30.1/100,000, பெண்களுக்கு 20.0/100,000).[1] நேபாளத்தில் ஒப்பீட்டளவில் அதிக பெண்:ஆண் விகிதம் உள்ளது. ஆண் தற்கொலைகள் 17வது இடத்திலும் பெண் தற்கொலை விகிதம் 3வது இடத்திலும் உள்ளது. ஆண்களின் தற்கொலை விகிதம் அதிகமாக இருந்தாலும், தற்கொலைக்கான முயற்சியில் ஆண்களை விட நேபாள பெண்கள் மூன்று மடங்கு அதிகமாக முயல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[8] தாய்வழி ஆரோக்கியம், குடும்ப வன்முறை மற்றும் இளைஞர்கள் பெண் தற்கொலையில் முக்கிய காரணிகளாக உள்ளன. இறப்பு அறிக்கையில் வெளியிடப்பட்ட வழக்கு ஆய்வு, பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளின் வகையை எடுத்துக்காட்டுகிறது:
மேலும் மறைமுகமாக, நேபாளத்தில் பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை நேபாளத்தில் பெண் தற்கொலைக்குக் காரணம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே தற்கொலையின் காரணங்களாகத் தேவையற்ற கர்ப்பம், இளம்வயது திருமணம் உள்ளன.[6] நேபாளப் பெண்களைப் பொறுத்தவரை, திருமணம் செய்துகொள்வது ஒருவரின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் விட்டுச்செல்லும் நிகழ்வோடு,[9] ஒரு "சார்பு வற்றாத சுழற்சியை” ஏற்படுத்துகிறது. இதனால் சிலர் தற்கொலையை தங்கள் ஒரே விருப்பமாகப் பார்க்க வழிவகுக்கின்றது.[10]
குறிப்பிடத்தக்க தற்கொலைகள்
தொகு- விசுவஜித் மல்லா, மல்லா வம்சத்தின் காந்திபூர் மன்னர்
- யோக்மயா நியூபனே, பெண்கள் உரிமை ஆர்வலர்
- சுங்தரே செர்பா, செர்பா
- பீம்சென் தாபா, நேபாள பிரதமர்
- பாரத் ராஜ் உப்ரேதி, உச்ச நீதிமன்ற நீதிபதி
- அலோக் நெம்பாங், நேபாளி திரைப்பட இயக்குநர்
- அனில் அதிகாரி (யம புத்தர்), நேபாள அசைப் பாடகர்
- ராகுல் ராய், நேபாள பாடகர்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Suicide rates Data by country". World Health Organization. 2015. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
- ↑ 2.0 2.1 "NEPAL: Why are so many women killing themselves?". Irin News. 11 January 2010. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
- ↑ 3.0 3.1 "SUICIDE AMONG WOMEN IN NEPAL" (PDF). Nepal Health Sector Support Programme. May 2012. Archived from the original (PDF) on 12 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 4.2 Benson, J; Shakya, R (2008). "Suicide prevention in Nepal: a comparison to Australia – a personal view". Mental Health in Family Medicine 5 (3): 177–82. பப்மெட்:22477866.
- ↑ Regmi, S. K.; Pokharel, A.; Ojha, S. P.; Pradhan, S. N.; Chapagain, G. (2004). "Nepal mental health country profile". International Review of Psychiatry 16 (1–2): 142–149. doi:10.1080/09540260310001635186. பப்மெட்:15276946.
- ↑ 6.0 6.1 "Female Suicides in Nepal and in the USA". Peace Voice. 30 August 2013. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
- ↑ "Maternal Mortality and Morbidity Study" (PDF). Family Health Division. 2009. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
- ↑ "Youth more prone to suicide". Kathmandu Post. 11 September 2010. Archived from the original on 12 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "A Silent Killer of Women — Suicide". த நியூயார்க் டைம்ஸ். 6 March 2014. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
- ↑ "A review of the evidence: suicide among women in Nepal" (PDF). Nepal Health Sector Support Programme. Archived from the original (PDF) on 8 June 2015. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.